தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.200 கோடி வசூலை நெருங்கும் 'காந்தாரா'

1 mins read
0cf22278-430a-421f-b933-c25b92bb03d4
-

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கடந்த மாதம் 30ஆம் தேதி வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. கர்நாடகாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது. கடந்த வாரத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மறுபதிப்பாகி வெளியானது. அனைத்து மொழிகளிலும் படத்திற்குப் பாராட்டுகளும் நல்ல வரவேற்பும் கிடைத்ததுள்ளது.

தற்போது இப்படத்தின் மொத்த உலக வசூல் 180 கோடியைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ரூ.165 கோடியும் வெளிநாடுகளில் ரூ.15 கோடியும் வசூலித்துள்ளதாம்.

இன்னும் ஒரு வாரத்திற்கு மேலும் படம் திரையரங்குகளில் தாராளமாக ஓடும் என்கிறார்கள். சுமார் ரூ.15 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஒரு படம் திரையரங்குகளில் ஓடி முடிவதற்குள் 200 கோடி வசூலைக் கடந்துவிடும் என்பது கன்னடத் திரையுலகத்தின் தகவல்.

'காந்தாரா' படத்தின் வெற்றி மற்ற மொழி திரையுலகத்தினரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. ஒரு படத்திற்குக் கதை, திரைக்கதை என்பதுதான் மிகவும் முக்கியம் என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்துள்ளது. கன்னட சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த ரிஷப் ஷெட்டி, தற்போது இந்தியா முழுவதும் தெரிந்த பான் இந்தியா நாயகராக மாறிவிட்டார்.