‘கவுண்டமணியுடன் இணைந்து நடிக்க ஆசை’

புது இயக்­கு­நர்­கள் வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளங்­க­ளு­டன் தம்மை அணுகு­வ­தா­க­வும் அவர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­று­வது வச­தி­யாக உள்­ளது என்­றும் சொல்­கி­றார் சந்­தா­னம்.

ஏற்­கெ­னவே வெற்­றிப் படங்­களைக் கொடுத்த இயக்­கு­ந­ரு­டன் இணை­யும்­போது ரசி­கர்­கள் மத்­தி­யில் அந்­தப் படம் குறித்த எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­து­வி­டு­கிறது என்­றும் அதற்­கேற்ப தாமும் அதி­கம் மெனக்­கெட வேண்­டி­யுள்­ள­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கவுண்டமணியின் தீவிர ரசிகர் சந்தானம் என்பது தெரிந்த விஷயம். இப்போது சென்­னை­யில் கவுண்­ட­மணி குடி­யி­ருக்­கும் அதே வீதி­யில் வீடு வாங்­கிக் குடி­யேறி உள்­ளார்.

விஜய் தொலைக்­காட்­சி­யில் வேலை பார்த்­த­போதே 'சென­டாஃப்' பகு­தி­யின் மீது தமக்கு ஈர்ப்பு அதி­கம் என்று குறிப்­பிட்­டு்­ளள அவர், அப்­போதே அந்­தப் பகு­தி­யில் வீடு வாங்க வேண்­டும் என கனவு கண்டுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"அது மிகவும் அமை­தி­யான பகுதி. கவுண்­ட­மணி சார் அங்­கே­தான் வசிக்­கி­றார் என்று கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றேன். அண்­ண­னு­டைய தீவிர ரசி­கன் நான். சில­முறை அவரை நேரில் சந்­தித்­தி­ருக்­கி­றேன்.

"இப்­போது அவ­ரது வீட்­டுக்கு அரு­கி­லேயே எனக்­கும் வீடு அமைந்­தி­ருப்­ப­தில் மகிழ்ச்சி. அவ­ரது கார் ஓட்­டு­நர் கண்­ணில்­பட்­டால், சார் எப்­படி இருக்­கி­றார்? என நலம் விசா­ரிப்­பேன். அதே­போல் அவ­ரும் என் கார் ஓட்­டு­ந­ரைப் பார்த்­தால் 'என்­னப்பா, தம்பி நன்­றாக இருக்­கி­றாரா?' என்று கேட்­பார்.

"மீண்­டும் நடிக்க வரும்­படி அவ­ருக்கு அழைப்பு விடுத்­தி­ருக்­கி­றேன். கதை­யும் கதா­பாத்­தி­ர­மும் சரி­யாக அமைந்­தால் அண்­ண­னு­டன் சேர்ந்து நடிப்­பேன்," என்று சொல்­லும் சந்­தா­னம், அடுத்து, 'ஏஜெண்ட் கண்ணாயி­ரம்', 'கிக்' ஆகிய இரு படங்­களில் நடித்து முடித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!