மிக விரைவில் தமிழ் மொழியை கற்றுக்கொள்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் தெரிவித்துள்ளார் பின்னணிப் பாடகி மதுஸ்ரீ.
அண்மையில் வெளியீடு கண்ட 'வெந்து தணிந்தது காடு' படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'மல்லிப்பூ வெச்சு' எனத் தொடங்கும் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இப்பாடலைப் பாடினார் மதுஸ்ரீ. பலத்த கைத்தட்டலுக்குப் பிறகு அவரிடம் பேசிய ரஹ்மான், "எனது இசையில் பதினைந்து ஆண்டுகளாகப் பாடுகிறீர்கள். எப்போது தமிழ் கற்கப் போகிறீர்கள்?" என்று கேட்க, "மிக விரைவில் கற்பேன்," என்றார் மதுஸ்ரீ. அதற்கு, "சீக்கிரம் கற்றுக் கொள்ளுங்கள். தமிழைக் கொலை செய்யாதீர்கள்," என்று ரஹ்மான் அறிவுறுத்த, மீண்டும் பலத்த கைத்தட்டல் எழுந்தது.
விஜய்யின் 'வாரிசு' படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வெளி யாகிறது. இதை அறிவிக்கும் விதமாக அப்படக் குழுவினர் புதிய சுவரொட்டி வெளி யிட்டுள்ளனர். இதற்கிடையே, ரஜினியின் 'ஜெயிலர்' படமும் 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகமும் ஒரே நாளில் மோத இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் தாமும் காதலிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் இளம் நாயகி அனு இம்மானுவேல் (படம்). சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புவதாக அவர் சாடியுள்ளார்.
ரஜினிகாந்த் தனது பேரக் குழந்தைகளுடன் சென்னை போயஸ் தோட்ட வீட்டில் உற்சா கத்துடன் தீபாவளி கொண்டாடி னார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
"ஏழைகளுக்கு யார் சேவை செய்தாலும் அவர்கள் அரசிய லுக்கு வந்ததாகவே அர்த்தம். அந்த வகையில் நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்," என்கிறார் நடிகர் விஷால்.
ராஜமவுலி இயக்கி வெற்றி பெற்ற 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த வெள்ளிக்கிழமை ஜப்பானில் வெளியானது. முதல் நாளிலேயே ரூ.1 கோடிக்கு மேல் வசூல் கண்டுள்ளது அப்படம்.
நடிகர் யோகிபாபு பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

