'காந்தாரா' படத்தின் பாடலுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

'காந்தாரா' படத்தின் பாடலுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

3 mins read
d3965175-b85f-43c6-bd42-22bcc87ffe3e
-

கன்­ன­டத்­தில் வெளி­யாகி விமர்­சன ரீதி­யா­க­வும் வசூல் ரீதி­யா­க­வும் வர­வேற்பைப் பெற்ற 'காந்­தாரா' திரைப்­ப­டம் பிற மொழி­க­ளி­லும் மொழி மாற்றம் செய்­யப்­பட்டு வெளி­யாகி இருக்­கிறது. படம் வெற்­றி­க­ர­மாக ஓடிக்­கொண்­டி­ருக்­கும் சூழ­லில், படத்­தில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கும் 'பூத கோல' வழி­பாட்டு முறை­யைப் பற்றி சர்ச்­சை­யான கருத்­தைத் தெரி­வித்ததால் பிரச்சினையில் மாட்டிக்கொண்டார் படத்­தின் இயக்­கு­நர் ரிஷப் ஷெட்டி.

மன்­னர் குடும்­பத்­தைச் சேர்ந்த வாரிசு ஒரு­வர் பூர்­வ­குடி மக்­க­ளின் நிலத்தை அப­க­ரிக்­கத் திட்­ட­மி­டு­கி­றார். அதைத் தெரிந்துகொள்­ளும் ஊர் மக்­கள் இத்­திட்­டத்தை முறி­ய­டித்­தார்­களா இல்­லையா என்­ப­து­தான் படத்­தின் கதை.

கட­லோர கர்­நா­ட­க­மான

உடுப்­பி­யின் கிரா­மத்­தில் நடக்கிறது திரைப்படத்தின் கதை. அப்­ப­குதி மக்­க­ளின் நம்­பிக்­கை­களில் ஒன்­று­தான் இந்­தப் 'பூத கோல' ஆட்­டம். இதில், தெய்வ வேடம் அணிந்­த­வர் ஊர் மக்­கள் முன்பு நட­ன­மாடி கதை சொல்­வார்.

படத்­தில் காட்­சிப்­

ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கும் 'பூத கோல' ஆட்­டம் ரசி­கர்­க­ளின் பாராட்­டு­க­ளைப் பெற்­றது. திரைக்­கதை எழுதி, இயக்கி, நடித்­தி­ருக்­கும் ரிஷப் ஷெட்டி இந்­தக் காட்­சி­களில் 'பூத கோல' ஆட்­டத்தை மிகச் சிறப்­பா­கக் காட்­சிப்­ப­டுத்­தி

­யி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், அண்­மை­யில் பத்­தி­ரி­கைக்­குப் பேட்டி அளித்­தி­ருந்­தார் ரிஷப் ஷெட்டி. அதில் "பூத கோல ஆட்­டம் இந்து மர­பு­க­ளின் ஓர் அங்­கம்" எனக் கருத்து தெரி­வித்­தி­ருந்தது தற்பொழுது சர்ச்­சை­யைக் கிளப்பி இருக்­கிறது.

படத்­தில் பூர்­வ­குடி மக்­களைக் காக்­கும் பஞ்­சு­ருளி தெய்­வம் இந்து கலாசா­ரத்­தைச் சேர்ந்­தக் கட­வு­ளா­கக் காட்­டப்­பட்­டுள்­ளது. இது­

கு­றித்து கேட்­கப்­பட்ட கேள்­விக்கு, "அந்­தத் தெய்­வங்­கள் நம் கலா ­சா­ரத்­தின் ஓர் அங்­கம். இவை கண்­டிப்­பாக இந்து கலாசார

மர­பு­க­ளின் கீழ் வரு­ப­வை­தான்.

"நான் ஓர் இந்து. எனது சமயத்தின் மீது எனக்கு மரி­யா­தை­யும் நம்­பிக்­கை­யும் உண்டு. அதற்­காக மற்ற மதத்­தி­னரை

தவ­றா­கச் சொல்ல மாட்­டேன். இந்து மதத்­தில் பின்­பற்­றப்­படும் மர­பு­க­ளைத்­தான் நாங்­கள் படத்­தில் காட்­சிப்­ப­டுத்தி இருக்­கி­றோம்," என்று தெரி­வித்­திருந்தார்.

ரிஷப் ஷெட்­டி­யின் கருத்­துக்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் வித­மாக கன்­னட நடி­கர் சேத்­தன் "பூத கோல நட­னம் ஆதி­வா­சி­க­ளின் கலை. அந்­தக் கலை மரபை ஆதி­

வா­சி­கள் வழி வழி­யாக பின்பற்றி­வந்­தி­ருக்­கி­றார்­கள். இது இந்து சமயத்துக்கு அப்பாற்பட்டது. இந்து சம­யம் இந்­தி­யா­வில் தோன்­றி­ய­தற்கு முன்பே ஆதி­வா­சி­கள் இந்­தி­யா­வில் இருந்­தி­ருக்­கி­றார்­கள்.

"மேலும் தொடர்ந்து இந்­தி­யை­யும் இந்து சமயத்தையும் திணிப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது,'' என்று பேசி­யி­ருந்­தார். அத­னை­ய­டுத்து அவர் மீது கர்­நா­டக மாநில இந்து அமைப்­பி­னர் காவல் ­நி­லை­யத்­தில் புகார் அளித்­த­தன் பேரில் சேத்­தன் குமார் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்.

இத்­து­டன் 'வராஹ ரூபம்' பாடல் காப்­பு­ரி­மையை மீறி இயற்­றப்­

பட்­டுள்­ள­தாக கேர­ளத்­தைச் சேர்ந்த 'தைக்­கு­டம் பிரிட்ஜ்' என்­ற இசைக்­ குழுவும் குற்­றம் ­சாட்­டி­யுள்­ளது.

2013ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட இந்த 'தைக்­கு­டம் பிரிட்ஜ்' இசைக்­குழு, மலை­யாள மொழி­யில் தனிப்­பா­டல்­களை இயற்றி வரு­கிறது. '96' திரைப்­ப­டத்­தின் இசை­

ய­மைப்­பா­ளர் கோவிந்த் வசந்­தா­வும் அவ­ரு­டைய நண்­பர்­களும் இக்­

கு­ழுவை நடத்தி வரு­கின்­ற­னர்.

கடந்த 2017ஆம் ஆண்டு 'நவ­ர­சம்' என்­கிற பாடலை இக்­குழு இயற்றி வெளி­யிட்­டது. யூடியூப்பில் வெளி­யான இப்­பா­டலை 40 லட்­சத்­துக்­கும் அதி­க­மா­னோர் பார்த்­துள்­ள­னர். கேரள நடன முறை­களில் ஒன்­றான 'தைய்­யம்' நட­னத்­தைப் பற்­றிய பாட­லாக 'நவ­ர­சம்' காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கும். இப்­பா­ட­லின் நகல்தான் 'வராஹ ரூபம்' எனக் குற்­றம் சாட்­டி­யி­ருக்­கும் தைக்­கு­டம் பிரிட்ஜ் இசைக்­குழு புகார் அளிக்கப்போவதாக அறிவித்து இருக்­கிறது.

எது எப்­படி இருப்­பி­னும் முன்னணி நடிகர்களைவிட கதைக்­குத்­தான் முத­லி­டம் என்று நிரூ­பித்து இருக்­கிறது இந்­தப் படம்.

சுமார் 17 கோடி ரூபா­யில் எடுக்­கப்­பட்டு தற்­பொ­ழுது 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கன்னடத்தில் அண்மையில் வெளிவந்து வெற்றி பெற்ற 'கேஜிஎஃப்' படத்தை பின்னுக்குத் தள்ளி பிரம்மாண்ட இயக்குநர்களையே தலைசுற்ற வைத்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.