'அழகில்லை என பயந்தேன்'

'அழகில்லை என பயந்தேன்'

3 mins read
6f641158-553d-4fa0-a26f-f9a048d0b215
-

கவர்ச்­சி­யாக நடித்­துப் பெய­ரெ­டுக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்­றும் நல்ல நடிகை எனப் பாராட்டு பெறு­வதற்கு கவர்ச்சி அவ­சி­யம் இல்லை என்­றும் சொல்­கி­றார் நடிகை சாய் பல்­லவி.

திரைத்­து­றை­யில் அடி­யெ­டுத்து வைக்­கும்­போது, தன் மனத்­தில் கணக்­கில் அடங்­காத பய­மும் அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்­பான்­மை­யும் இருந்­த­தாக அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"என்னை சிறந்த நடிகை என்று எல்­லா­ரும் பாராட்­டு­கி­றார்­கள். உண்­மை­யில் நான் நடிப்­புக்கு என தனிப் பயிற்சி ஏதும் பெற­வில்லை. ஒரு­வேளை அது­தான் எனது பலம் என்று இப்­போது நினைக்கத் தோன்­று­கிறது.

"உண்­மை­யில் என் வீட்­டில் எப்­படி இருக்­கி­றேனோ, திரை­யில்­கூட அப்­ப­டித்­தான் காட்­சி­ அளிக்­கி­றேன். சாய் ­பல்­லவி நன்­றாக நடித்­தி­ருக்­கி­றார், வெளுத்து வாங்கிவிட்­டார், கதா­பாத்­தி­­ர­மா­கவே வாழ்ந்து காட்­டி­விட்­டார் என்­றெல்­லாம் ரசி­கர்­கள் பாராட்­டும்­போது வியப்­பா­க­வும் குழப்­ப­மா­க­வும் இருக்­கும்.

"என் அம்மா அடிக்­கடி, 'நீ எங்கே நடித்­தாய்? வீட்­டில் எப்­படி இருக்­கி­றாயோ அப்­ப­டித்­தானே இருக்­கி­றாய்...' என்று சொல்லி ஆச்­ச­ரி­யப்­ப­டு­வார். அதே­போல் நட­னத்­துக்­கும்­கூட சிறப்பு பயிற்சி ஏதும் பெற­வில்லை," என்­கி­றார் சாய் பல்­லவி.

குறிப்­பிட்ட கதா­நா­ய­க­னு­டன்­தான் நடிக்க வேண்­டும் என்ற எல்­லை­களை தாம் வகுத்­துக்­கொள்­ள­வில்லை என்று குறிப்­பிடும் இவர், கதை நன்­றாக இருந்­தால் யாரு­டன் வேண்­டு­மா­னா­லும் இணைந்து நடிக்­கத் தயார் என்­கி­றார்.

திரைத்­து­றை­யில் உள்ள அனைத்து கதா­நா­ய­கர்­க­ளு­டன் நடிக்க விரும்­பு­வ­தா­க­வும் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் த­னித்திறமை­கள் இருப்­ப­தா­க­வும் சொல்­கி­றார்.

"அனைத்து கதா­நா­ய­கர்­க­ளி­டம் மரி­யாதை வைத்­துள்­ளேன். தெலுங்கு நடி­கர் அல்லு அர்­ஜூ­னு­டன் ஒரு படத்­தில்­கூட நடித்­த­தில்லை. அவ­ரது நடனம் எனக்கு மிக­வும் பிடிக்­கும்.

"அதேபோல் மகேஷ்­பாபு திரை­யில் வரும்­போது வெகு­வாக ரசிப்­பேன். ஆண்­கள்­கூட இவ்­வ­ளவு அழ­காக இருப்­பார்­களா? என்று அவரை பார்க்கும் போதெல்­லாம் அதி­ச­யித்துப் போகி­றேன்.

"ஒட்­டு­மொத்­தத்­தில் பார்க்­கும்­போது எனக்கு எப்­போ­தும் பிடித்­த­மான கதா­நா­ய­கன் சூர்யா. அவ­ரோடு நடித்த எல்லா காட்­சி­க­ளுமே எனக்கு மிக­வும் பிடித்­த­வை­தான்.

"என்­னைப் பொறுத்­த­வ­ரை­ நான் அழ­கான பெண் அல்ல. என் முகம் எல்­லாம் பருக்­கள் இருக்­கும். எனக்கு கதா­நா­ய­கி­யின் அம்­சம் இல்லை என்று நினைப்­பேன். திரை­யில் பார்க்­கும்­போது ரசி­கர்­க­ளால் என்­னை­யும் எனது நடிப்­பை­யும் ரசிக்க முடி­யுமா? எனக்கு இந்த சினி­மாத் துறை இடம் கொடுக்­குமா? என்று பல­வி­த­மாக யோசிப்­பேன்.

"அதற்­குக் கார­ணம் இருந்­தது. நான் திரைத்­து­றைக்கு வந்­த­போது அது­வரை பார்த்த கதா­நா­ய­கி­கள் எல்­லோ­ருமே அழ­கா­ன­வர்­கள். அவர்­க­ளோடு ஒப்­பி­டும்­போது நான் ஒன்­று­மில்லை என்று தோன்­றி­யது.

"அத­னால் 'பிரே­மம்' மலை­யா­ளப் படத்­தில் அறி­மு­க­மா­ன­போது, அதன் இயக்­கு­ந­ரி­டம், 'உங்­கள் கதா­பாத்­தி­ரத்­திற்கு நான் சரி­யா­ன­வள்­தானா? பாதிப் படப்­பி­டிப்பு முடிந்­த­தும் என்னை நீக்­கி­விட மாட்­டீர்­களே' என்று நூறு முறை­யா­வது கேட்­டி­ருப்­பேன்.

"ஆனால் அந்­தப் படம் வெளி­யீடு கண்ட பிறகு திரை­யரங்­கத்­துக்குச் சென்று பார்த்­த­போது, பெரும்­பாலான ரசி­கர்­கள் படம் முடிந்­த­வு­டன் எழுந்து நின்று கைதட்­டி­னார்கள். எனக்­கென்று சினிமாத்­து­றை­யில் ஓர் இடம் கிடைத்­தி­ருக்­கிறது என்று அன்றே எனக்­குத் தோன்­றி­யது. அதன் பிறகு தன்­னம்­பிக்­­கை­யும் அதி­க­ரித்­தது," என்­கி­றார் சாய் பல்­லவி.

தனது உடற்­கட்டை கச்­சி­த­மாக வைத்­தி­ருந்­தா­லும் சாய் பல்­லவி உடற்­ப­யிற்சி ஏதும் செய்­வ­தில்­லை­யாம். சைவ உணவு மட்­டுமே சாப்­பி­டு­கி­றார். பருப்பு, ரசம் சாதம் என்­றால் ரொம்­பப் பிடிக்­கும் என்­றும் படப்­பி­டிப்­பின்­போது மோர், இள­நீர் மட்­டுமே பரு­கு­வ­தா­க­வும் சொல்­கி­றார்.

"ஓய்­வாக இருந்­தால் பேட்­மின்­டன் விளை­யா­டு­வேன். அவ்­வ­ளவு எளி­தில் என் உடல் எடை­கூ­டாது. உடல் பருமனும் ஏற்­ப­டாது.

"அத­னால் உடற்­ப­யிற்சி செய்­வ­தில் ஆர்­வம் இல்லை. சமூக ஊட­கங்­களில் நேரம் செல­வி­டு­வ­தில்லை. அத­னால் எந்தப் பய­னும் இல்லை என்­பது எனது தனிப்­பட்ட கருத்து.

"அதே சம­யம் நாட்டு நடப்­பு­கள் தொடர்­பான முக்­கி­ய­மான, அண்­மைய தக­வல்­கள் ஏதும் இருந்­தால், என் தங்கை விவ­ரம் தெரி­விப்­பார். அதன் பிறகு இணை­யத்­திலோ, தொலைக்­க­காட்­சி­யிலோ செய்­தி­க­ளைப் பார்த்து விவ­ர­ங்­க­ளைத் தெரிந்துகொள்­வேன்," என்­கி­றார் சாய் பல்­லவி.

பெண்கள் தாழ்வு மனப்பான்மையை ஒதுக்கி வைத்துவிட்டு விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்து பவர், வெற்றி தோல்விகள் குறித்து கவலைப்படக்கூடாது என்றும் ஒரு கட்டத்தில் வெற்றி தன்னால் கைகூடும் என்றும் சொல்கிறார்.

தற்போது தமிழிலும் தெலுங்கிலும் தலா இரண்டு புதுப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சாய் பல்லவி. அவற்றுள் இரண்டு படங்கள் நாயகியை மையப்படுத்தும் கதைக் களங்களைக் கொண்டவையாம்.

, :   