இதுவரை குடும்பப் பாங்கான, அமைதியான
கதாபாத்திரங்களில்
மட்டுமே நடித்து வந்த கயல் ஆனந்தி 'ஒயிட் ரோஸ்' என்ற புதுப் படத்தில் சமூக அவலங்களை தட்டிக்கேட்கும் துணிச்சலான பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர். அதில் கையில் கோடாரியுடன் மிரட்டலாகக் காட்சி அளிக்கிறார் ஆனந்தி.
'வாரிசு' படத்தில் மொத்தம் நான்கு வில்லன்கள் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குநர் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நான்காவது வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.
உலகம் முழுவதும் 29 நாடுகளில் செயல்பட்டு வரும் 'வேர்ல்ட் வைல்ட் லைஃப்
ஃபண்ட் ஃபார் நேச்சர்' என்ற அமைப்பின் தூதராக நடிகை ஷ்ருதி ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொண்டு அமைப்பானது வனவிலங்குகளை இயற்கையான முறையில் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஷ்ருதி, அமைப்பின் கொள்கைகளை வலியுறுத்தும் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நித்தம் ஒரு வானம்' படத்தில் மூன்று கதாநாயகிகள் இருக்க வேண்டும் எனத் தாம் வற்புறுத்தியதாக வெளியான தகவலை நடிகர் அசோக் செல்வன் மறுத்துள்ளார். இது தொடர்பாக தாம் இயக்குநருக்கு அழுத்தம் ஏதும் கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ரித்துவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்க, கோபி சுந்தர் இசையமைக்க, கார்த்திக் இயக்குகிறார்.
தமிழில் பக்திப் படங்கள் தயாரிப்பது அறவே குறைந்து விட்ட நிலையில், 'ஸ்ரீ சபரி அய்யப்பன்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது. ராஜா தேசிங்கு இயக்கும் இந்தப் படத்தை அய்யப்ப பக்தர்கள் சிலர் இணைந்து தயாரிக்கின்ற னர். விஜய் பிரசாத் நாயகனாக வும் பூஜா நாகர் நாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய காட்சி கள் சபரிமலையில் படமாக்கப் பட்டுள்ளன. கார்த்திகை மாதத் தொடக்கத்தில் படம் வெளியீடு காண உள்ளது.
கிரிக்கெட் வீரர் டோனி தனது சொந்த பட நிறுவனம் மூலம் தமிழில் தயாரிக்கும் படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாகவும் மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தின் கதையை டோனியின் மனைவி சாக்ஷி எழுதுகிறார்.
ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளதாகத் தகவல்.

