கமலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் 'விக்ரம்'

கமலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் 'விக்ரம்'

1 mins read
7b49c2ae-e517-4e2e-829d-e5d498125474
-

லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் கமல் நடித்த 'விக்­ரம்' மிகப்­பெ­ரிய வெற்றி பெற்­றது. கம­லு­டன் விஜய்­

சே­து­பதி, பகத் பாசில், காயத்ரி உள்­பட பலர் நடித்­தி­ருந்­தார்­கள். அனி­ருத் இசை அமைத்­தி­ருந்­தார். 'ரெட் ஜெய்ண்ட்' நிறு­வ­னம் வெளி­யிட்­டி­ருந்­தது.

கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளி­யான இந்­தப் படம் ஒரு சில திரை­

ய­ரங்­கு­களில் தொடர்ந்து ஒரு காட்­சி­யாக ஓடிக்கொண்­டி­ருக்­கிறது.

நவம்பர் 7ஆம் தேதி உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள். அன்றைய தினம் 'விக்ரம்' படத்தின் 100வது நாள் கொண்டாட்டத்தை நடத்த இருக்கிறது ராஜ் கமல் நிறுவனம்.

இதன் தொடர்பாக ராஜ்­கமல் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள செய்திக்குறிப்­பில், "விழா கலை­வா­ணர் அரங்­கில் நடக்க இருக்கிறது. அந்த விழாவில் திரைப்­ப­டம் தொடர்­பு­டைய அனை­வ­ரும் கௌர­விக்­கப்­பட இருக்­கி­றார்­கள். இணைத் தயா­ரிப்­பா­ள­ரான மகேந்­தி­ரன் இந்த நிகழ்ச்­சியை ஒருங்­கி­ணைக்க உள்­ளார்," என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.