'யசோதா' படத்தில் வாடகைத் தாயாக சமந்தா

'யசோதா' படத்தில் வாடகைத் தாயாக சமந்தா

1 mins read
ea64cb09-6d70-4cfd-b359-70fe9b9b4839
'யசோதா' படத்தின் சுவரொட்டியில் சமந்தா. -

தமிழகத்தில் வாடகைத் தாய் குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில், சமந்தா நடிப்­பில் அடுத்து வெளி­வ­ரப்­போ­கும் 'யசோதா' பட­மும் வாட­கைத்­தாய் விவ­கா­ரத்தை மையப்­ப­டுத்தி உரு­வாகி உள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது.

இது நேர­டித் தெலுங்­குப் பட­மாக உரு­வாகி உள்­ளது என்­றா­லும் ஒரே சம­யத்­தில் தமிழ், கன்­ன­டம், மலை­யா­ளம், இந்தி உள்­ளிட்ட மொழி­க­ளி­லும் வெளி­யீடு காணு­மாம். மேலும், இந்­தியா முழு­வ­தும் உள்ள திரை ரசி­கர்­க­ளைக் கவ­ரும் வகை­யில் கதை, திரைக்­கதை அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக இப்­படத்தை இயக்கி உள்ள இரட்டை இயக்­கு­நர்­க­ளான ஹரி, ஹரிஷ் கூறு­கின்­ற­னர்.

இப்­ப­டத்­துக்கு மணி­சர்மா இசை­ய­மைக்க எம்.சுகு­மார் ஒளிப்­பதிவு செய்­துள்­ளார்.

இப்­ப­டத்­தின் குறு­முன்­னோட்டக் காட்­சித் தொகுப்பை தெலுங்­கில் விஜய் தேவ­ர­கொண்டா, தமி­ழில் சூர்யா, கன்­ன­டத்­தில் ரக்ஷித் ஷெட்டி, மலை­யா­ளத்­தில் துல்­கர் சல்­மான், இந்­தி­யில் வருண் தவான் ஆகி­யோர் வெளி­யிட்­ட­னர்.

ஒரு கோடீஸ்­வர பெண்­ணுக்கு வாட­கைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுக்­கி­றார் சமந்தா. ஆனால், இதற்கு ஏற்­பாடு செய்து தனி­யார் மருத்­து­வ­மனை அவரை மோசடி செய்­கிறது. அந்த மருத்­து­வ­ம­னையை எதிர்த்து சமந்தா போராடிச் சாதிப்­ப­து­தான் கதை­யாம்.