சமந்தா: விரைவில் பூரண குணமடைவேன்

சமந்தா: விரைவில் பூரண குணமடைவேன்

2 mins read
8b961079-24c2-40ad-9ada-a264c43d948a
-

தமிழ், தெலுங்கு மொழி­களில் ஏரா­ள­மான திரைப்­ப­டங்­களில் நடித்­துள்ள சமந்­தா­வுக்கு ரசி­கர்­கள் பட்­டா­ளம் ஏரா­ளம். இவர் நடித்­தி­ருக்­கும் 'யசோதா' படத்­தின் முன்­னோட்­டக் காட்சி அண்­மை­யில் வெளி­யா­னது. அதற்குப் பல­ரும் அளித்த வர­வேற்­பில் மகிழ்ந்த சமந்தா, "நான் கையில் மருந்து ஏற்­றிக்­கொண்டே இந்­தப் படத்­திற்கு குரல் கொடுத்து வருகிறேன்," என்று சமூக வலைத்­த­ளத்­தில் பதி­விட்டு இருந்­தார். அதைப் பார்த்த ரசி­கர்­கள் சமந்­தா­விற்கு என்ன ஆனது? என்ற கவ­லை­யில் மூழ்­கினர்.

அது சம்பந்தமாக நடிகை சமந்­தா­ சிகிச்சைக்காக வெளி­நாட்­டுக்குச் சென்றிருப்பதாக செய்­தி­கள் வெளி­யா­யின.

நடிகை சமந்தா சூர்­யா­வின் 'அஞ்­சான்' படத்­தில் நடித்­துக்கொண்­டி­ருந்­த­போது அவ­ருக்கு சருமப் பிரச்­சினை இருந்­த­தா­க­வும் அத­னால் அவர் வெளி­நாடு சென்று சிகிச்சை பெற்று வந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது. அந்த பிரச்­சினை மீண்­டும் வந்­தி­ருப்­ப­தா­க­வும் அத­னால் அவர் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் நடிகை சமந்தா தனக்கு என்ன பிரச்­சினை என்­பதை வெளிப்­ப­டை­யாகத் தனது இன்ஸ்­ட­கி­ராம்

பக்­கத்­தில் தெரி­வித்­துள்­ளார். "நான் நடித்த 'யசோதா' திரைப்­ப­டத்­திற்கு அமோக ஆத­ரவு கொடுத்த ரசி­கர்­க­ளுக்கு எனது நன்­றியைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.

"நான் 'மயோ­சிட்­டிஸ்' எனப்­படும் சருமப் பிரச்­சி­னைக்கு சிகிச்சை பெற்று வரு­கி­றேன். இந்­தப் பிரச்­சி­னை­யி­லி­ருந்து நான் முழு­வ­தும் மீண்ட பிறகு இது­கு­றித்து பதிவு செய்­ய­லாம் என்று இருந்­தேன். ஆனால் நான் எதிர்­பார்த்­ததை விட சிகிச்சை முடிய அதிக நாள்­கள் ஆகும் என்­

ப­தால் இப்­போது நான் இதைப் பற்றி சொல்ல வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது.

"நான் தற்­பொழுது மெது­வாகக் குண­மாகிக் கொண்­டி­ருக்­கி­றேன். இந்தப் பாதிப்பை ஏற்­றுக்­கொண்டு, சிகிச்­சை­யைப் போராடி வெற்றி பெறுவதும் அவ­சி­ய­மான ஒன்­றாக

கரு­து­கி­றேன். நான் விரை­வில் பூரண குண­ம­டைந்து விடு­வேன் என்று மருத்­து­வர்­கள் எனக்கு நம்­பிக்கை தெரி­வித்து இருக்­கி­றார்­கள். அனை­வ­ருக்­கும் நல்ல நாள்­களும் கெட்ட நாள்­களும் வரும் என்­பதுபோல் எனக்­கும் அதைப்போல வந்திருக்கிறது என்­பதை நான் உணர்­கி­றேன்.

"உடல் ரீதி­யா­க­வும் உணர்வு ரீதி­யா­க­வும் ஒவ்­வொரு நாளை­யும் கடி­ன­மாக கழிக்க வேண்டி இருக்கிறது. ஆனா­லும் நான் குண­ம­டை­யும் நாளை நெருங்கி விட்­ட­தா­கவே கரு­து­கி­றேன்," என்று பதிவிட்டு உள்ளார்.

இந்­தப் பதிவை அடுத்து நடிகை சமந்­தா­வுக்கு என்ன பிரச்­சினை என்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தால் அவ­ரது உடல் நலம் குறித்து அனைத்து வதந்­தி­க­ளுக்­கும் முடிவு கட்­டப்­பட்டு விட்­ட­தா­கக்

கரு­தப்­ப­டு­கிறது.

இதற்­கி­டை­யில் 'யசோதா' படம் தெலுங்கு, தமிழ், கன்­ன­டம், மலை­யா­ளம், இந்தி ஆகிய மொழி­களில் நவம்­பர் மாதம் 11ஆம் தேதி வெளி­யாக இருக்­கிறது. அத­னால், அவர் மருத்­து­வ­ம­னை­யில் படுத்­துக்­கொண்டே படங்க­ளுக்கு குரல் பதிவு செய்து வரு­கி­றார். அதைக் கேள்­விப்­பட்­ட­தில் இருந்து அவ­ரு­டைய ரசி­கர்­கள் சமந்தா விரை­வில் குண­ம­டைய வேண்டும் என்று பிரார்த்­தனை செய்து வரு­கி­றார்­கள்.

'யசோதா' படத்­தில் அமை­தி­யான அன்­பான கர்ப்பி­ணி­யா­க­வும் அதே­ச­ம­யம் ஆக்­ரோ­ஷ­மாக அடி­

த­டி­யில் இறங்­கும் பெண்­ணா­க­வும் சமந்தா நடித்­துள்­ளார்.

அவ­ரு­டைய நடிப்பு இந்தப் படத்­தில் வித்­தி­யா­ச­மாக இருக்­கும் என்று கூறு­கின்­ற­னர் படக்­கு­ழு­வி­னர். சதி செய்­யும் மருத்­து­வ­ம­னை­யின் உரி­மை­யா­ள­ராக வர­லட்­சுமி சரத்­கு­மார் எதிர்­ம­றைக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.