டிசம்பர் மாதம் வெளியாக இருந்த தனுஷ், சிம்பு படங்கள் அடுத்த ஆண்டு தள்ளிப்போனது. அதனால் இந்த நல்ல வாய்ப்பைத் தவற விடாத ஜெயம் ரவி தான் நடித்திருக்கும் 'அகிலன்' படத்தை டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டு அறிவித்திருக்கிறார்.
தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்தப் படத்தின் 'கிராபிக்ஸ்' பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளனர்.
அதைப்போல டிசம்பர் 14ஆம் தேதி சிம்புவின் 'பத்து தல' படம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் இந்தப் படமும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஜெயம் ரவி நடித்திருக்கும் 'அகிலன்' படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் தன்யா ரவிச்சந்திரனும் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

