24 விருதுகளை வென்ற தமிழ்ப் படம்

24 விருதுகளை வென்ற தமிழ்ப் படம்

2 mins read
0931c782-4097-48ea-a2f8-99b8b6528acf
-
multi-img1 of 2

52 நிமிடங்கள் ஓடும் தமிழ்த் திரைப்­

ப­டம் '21 கிராம்ஸ் பிலா­சபி' அனைத்­துலக அள­வில் 24 விரு­து­களைப் பெற்றிருக்கிறது.

அறி­முக நடி­க­ராக படத்­தில் நடித்­தி­ருக்­கும் மோக­ணேஷ் சிறந்த நடிப்­பிற்­காக பல விரு­து­களை வென்­றி­ருக்­கி­றார்.

இந்த உல­கில் எல்­லா­வற்­றை­யும் விட ஓர் உயி­ரின் மதிப்பே உயர்ந்­தது, மிக முக்­கி­ய­மா­னது. ஒரு­வ­ரின் உயிரை எடுக்­கும் உரிமை யாருக்­கும் இல்லை. இந்­தக் கருத்தை மைய­மாக வைத்து, ஒரு மாறு­பட்ட புது முயற்­சி­யாக இளை­ஞர்­க­ளின் திற­மை­யில் உரு­வா­கி­யுள்ள திரைப்

­ப­டம் '21 கிராம்ஸ் பிலா­சபி'.

இயக்­கு­நர் யான் சசி இயக்­கத்­தில், மோக­ணே­ஷு­டன் பூ ராமு, ஜோசப் ஆகி­யோர் முக்­கியப் பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர்.

ஒரு பிரச்­சினை­யில் மகனை, ரௌடி கடத்­தி­விட அவ­னைக் காணா­மல் தேடு­கி­றார் தந்தை. தலை மட்­டும் வெளி­யி­லி­ருக்­கு­மாறு மண்­ணில் புதைக்­கப்­பட்ட நிலை­யில், உயி­ருக்குப் போரா­டும் பாத்­தி­ரத்­தில் மோக­ணேஷ் நடித்­துள்­ளார்.

'சூர­ரைப்­ போற்று', 'பூ' என பல தமிழ்ப் படங்­களில் குணச்­சித்­திர நடி­க­ராக புகழ்­பெற்ற நடி­கர் 'பூ' ராமு தந்­தை­யாக நடித்­துள்­ளார்.

முழுவதும் மதுரையைச் சுற்றி யுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கோல்கத்தா அனைத்துலக கல்ட் திரைப்படவிழா, தாகூர் அனைத்துலக திரைப்படவிழா, ரோம், தோக்கியோ, அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்படவிழா என உலகம் முழுவதும் இதுவரையிலும் 24 விருதுகளை இப்படம் வென்றுள்ளது. உலகம் முழுவதுமுள்ள திரை ரசிகர்கள் கொண்டாடிய இப்படம், விரைவில் தமிழ் மக்கள் பார்வைக்கு வரவுள்ளது.

அறி­முக நடி­கர் மோக­ணேஷ் மிகச்­சி­றப்­பான நடிப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார். முதல்­ ப­டத்­தி­லேயே அனைத்­து­லக திரை­வி­ழாக்­களில் 7 சிறந்த நடி­கர் விருதை வென்­றுள்­ளார் என்­பது குறிப்­பி­ட­த்தக்­கது. மேலும் சில திரை விழாக்­களில் சிறந்த இயக்­கு­ந­ருக்­கான விரு­தினை யான் சசி வென்றுள்­ளார்.