'வாரிசு' படத்தில் விஜய் கோடீசுவரராக நடிக்கிறார். அந்தப் படத்தின் சுவரொட்டியை தீபாவளி சிறப்பாக வெளியிட்டு இருந்தார்கள். அவரின் ரசிகர்கள் சும்மா இருக்காமல் சுவரொட்டியில் விஜய் கட்டியிருந்த கைக்
கடிகாரத்தை பெரிதாக்கிப் பார்த்து அந்தக் கடிகாரத்தின் பெயர், அதன் விலை என்ன என்று அலசி ஆராய்ந்து பார்த்த பிறகு வாயடைத்துப்போய் நின்றார்கள்.
காரணம் அந்தக் கைக்கடிகாரம் 90 லட்ச ரூபாய் என்று கண்டுபிடித்து இருக்கின்றனர். ரோஸ் கோல்ட், ஒயிட் கோல்டுகளால் அந்த கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
கோடீசுவரராக நடிக்கும்போது சாதாரண கடிகாரம், கண்ணாடியை அணிந்தால் சரியாக இருக்காது என்பதால்தான் அவர் பயன்
படுத்தும் அனைத்துப் பொருள்களும் விலை
உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாக படக்குழுவும் அறிவித்து இருக்
கிறது.
பொங்கலுக்கு வெளியாகும் 'வாரிசு', 'துணிவு' என இரு பெரும் படங்களும் மோதிப் பார்த்துவிட முடிவு செய்துள்ள நிலையில், எந்தப் படம் அதிக திரையரங்குகளைப் பிடிக்கும், எந்தப் படம் முதலில் வெளியாகும் என்ற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் கிளம்பி உள்ளன. இரு படங்களுக்கும் பெரும் வசூல் குவியுமா? அல்லது ஒரு படம் அடிவாங்குமா? என ஏகப்பட்ட கணிப்புகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

