நடிகை சமந்தா மயோசைட்டிஸ் எனப்படும் தன்னெதிர்ப்பு இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆறுதல் தெரிவித்து நடிகர் சிரஞ்சீவி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "சமந்தா, நம் வாழ்க்கையில் அவ்வப்போது சவால்கள் வந்துகொண்டேயிருக்கும். அவை நம் மனவலிமையைக் கண்டறிவதற்காகக்கூட இருக்கலாம். மிகப்பெரிய மனவலிமை கொண்ட அற்புதமான பெண் நீங்கள். விரைவில் உங்களுக்கான இந்த சவாலையும் நீங்கள் முறியடிப்பீர்கள். தைரியமும் நம்பிக்கையும் கிடைக்க வாழ்த்துகள்,"என்று குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவுக்காக திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவர்களில் சமந்தாவின் முன்னாள் மைத்துனர் அகிலும் ஒருவர். இவர், "டியர் சாம், நீங்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். என்னுடைய அன்பு எப்போதும் உங்களுக்கு உண்டு," என்று பதிவிட்டு இருக்கிறார். இதைப் பலரும் 'லைக்' செய்துள்ளனர்.

