'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பிறகு சரித்திர படங்களை உருவாக்கும் ஆர்வம் கோலிவுட்டில் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் 'சங்கமித்ரா' படத்தை இயக்க சுந்தர்.சி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். ஜெயம் ரவி நாயகனாக நடிக்க உள்ளார். படம் எப்போது உருவானாலும் அதற்கு இசையமைத்துத் தருவதாக
ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார். இதனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்திருந்த 'நம்ம வீட்டுப் பிள்ளை' என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்த அனு இமானுவேல் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷுடன் ஒரே வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் பரவியது. அதுபற்றி அனு கூறுகையில், "இந்த விஷயத்தில் உண்மை இல்லை. அல்லு சிரிஷும் நானும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் எந்தத் தொடர்பும் கிடையாது. இப்போதைக்கு நான் தனியாகத்தான் இருக்கிறேன். யாரையும் காதலிக்கவில்லை. நிறைய கதைகள் கேட்கிறேன். எனக்குப் பிடித்த வேடத்தை மட்டுமே ஏற்கிறேன்," என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
தனுஷ் 2017ஆம் ஆண்டு 'பவர் பாண்டி' என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்தப் படத்தை 'சன் பிக்சர்ஸ்' தயாரிக்க உள்ளது. தனது அடுத்த படத்திலும் தனுஷ் மூத்த நடிகர் ஒருவரை நாயகனாக நடிக்க வைக்கப் போவதாக கூறப்படுகிறது.
2006ஆம் ஆண்டில் வடிவேலுவை வைத்து சிம்பு தேவன் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தை இயக்கி இருந்தார். இவர் மீண்டும் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார். ஆனால் வடிவேலுவைக் கைவிட்டுவிட்டு அவருக்குப் பதிலாக யோகிபாபுவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

