வெற்றிமாறனின் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் சூர்யா. இந்தப் படத்திற்குப் பிறகு சூர்யா, இயக்குநர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமான ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருக்
கிறார். அது தற்பொழுது கோலிவுட்டைக் கலக்கிக்கொண்டு இருக்கிறது.
கார்த்தியின் 'விருமன்' பட இசை வெளியீட்டு விழாவில் எம்.பி.யும் எழுத்தாளருமான சு.வெங்கடேசனும் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய சூர்யா, சு.வெங்கடேசனுடன் இணைந்து விரைவில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். அதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார்.
சு.வெங்கடேசனின் 'வேள்பாரி' நாவலை படமாக எடுக்க இருப்பதைத்தான் சூர்யா கூறியதாக சொல்லப்பட்டது. இப்போது அந்தப் படத்தில்தான் சூர்யாவும் சங்கரும் இணைந்துள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதனை கார்த்திக் சுப்புராஜ் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கார்த்திக்
சுப்புராஜ், "வேள்பாரி' நாவலைப் படமாக எடுக்க சங்கர் முடிவு செய்துள்ளார். அது ரூ.1,000 கோடியில் தயாராக இருக்கிறது," என்றார்.
இதற்கான கதை எழுதும் வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. வரவு செலவு அதிகம் என்பதால் 'RC 15', 'இந்தியன் 2' படங்களை சங்கர் முடிக்க திட்டமிட்டுள்ளார். சங்கர் அடுத்து இயக்கவுள்ள படம் 'வேள்பாரி' நாவல்தான் என்பதையும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
தற்பொழுது இந்திய சினிமாவில், வரலாற்று கதைகளை மையப்படுத்தி படம் எடுக்கும் முயற்சிகளில் பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்திய சினிமாவை 'பாகுபலி'க்கு முன் 'பாகுபலி'க்கு பின் என்றுதான் பிரித்துப் பார்க்கவேண்டும்.
ஒரு வரலாற்று கதையை பிரம்மாண்டமாக எடுத்தால் அது வெற்றி பெறுமா என்ற தயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தைக் கூட இதற்கு முன்பு நடிகர் கமல்ஹாசன், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் எடுக்க முயற்சி செய்தும் அவர்களால் முடியாமல் போனது.
அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தின் மூலம் வரலாற்று கதைகளை 'பொன்னியின் செல்வன்' படத்தைப்போல பிரம்மாண்டமாக எடுத்தால் மக்கள் நிச்சயம் அந்த படத்திற்கு அங்கீகாரம் கொடுப்பார்கள் என்கின்ற தைரியம் பல இயக்குநர்களுக்கு தற்பொழுது வந்திருக்கிறது.
மேலும், "இதை நீங்கள் படமாக எடுக்கலாம்," என்று சங்கரை
வலியுறுத்தியுள்ளார் இயக்குநர்
லிங்குசாமி. அதன்பின் 'வேள்பாரி' கதையைப் படித்த சங்கர், இதைப் படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்.
பிரபல எழுத்தாளரும் மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசனிடம் பெரும் தொகையைக் கொடுத்து அந்த நாவலை வாங்கியுள்ளார் இயக்குநர் சங்கர்.
இந்தப் படத்தை மூன்று தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள். அதில் பிரபல 'ஓடிடி' நிறுவனமான 'நெட்ஃபிக்ஸ்', பிரபல இந்தி தயாரிப்பாளர் கரண் ஜோகர், பிரபல இந்தி தயாரிப்பு நிறுவனம் ஆகியோருடன் சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதில் 'ஓடிடி' தளத்தை 'நெட்பிக்ஸ்' நிறுவனமும் திரையரங்கு வெளியீட்டை கரண் ஜோகரும் பிரித்துக்கொள்ளலாம் என்று அவர்களுக்குள் பேசி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சுமார் ஆயிரம் கோடி வரவு செலவுத் திட்டத்தில் உருவாகும் 'வேள்பாரி' படத்தை பல மொழிகளில் எடுத்து உலகம் முழுவதும் வெளியிட திட்ட
மிட்டுள்ளனர்.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தைத் தொடர்ந்து மேலும் தமிழரின் வரலாறை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல தயாராகிவிட்டார் இயக்குநர் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கர் தற்பொழுது தெலுங்கு
நடிகர் ராம்சரண் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அத்துடன் பாதியிலே நின்ற 'இந்தியன் 2' படத்தையும் மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளார்.
சங்கர் இந்த இரண்டு படங்
களின் வேலைகளையும்
முடித்துவிட்டு, 'வேள்பாரி' படத்தைத் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
இளவரசி குந்தவையாக நடித்ததால் திரிஷாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் அவரைப்போல ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பல நடிகைகள் இயக்குநரையும் தயாரிப்புத் தரப்பையும் அணுகி வாய்ப்புக் கேட்டு வருவதாகக் கூறப்படு கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கும் சூர்யாவின் தோற்றம்.