சிஷ்யனுக்காக இசையமைத்த இயக்குநர்

சிஷ்யனுக்காக இசையமைத்த இயக்குநர்

2 mins read
7da4f8c6-2624-48f1-994c-ba59a093fa4e
'டெவில்' படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியில் பூர்ணா. -
Google News Preferred Icon

'சவ­ரக்­கத்தி' படம் மூலம் தமிழ் சினிமா ரசி­கர்­க­ளின் கவ­னம் ஈர்த்­த­வர் ஜி.ஆர்.ஆதித்யா. இப்­போது 'டெவில்' என்ற தலைப்­பில் புதுப் படத்தை இயக்கி வரு­கி­றார்.

மிஷ்­கி­னி­டம் உதவி இயக்­கு­நரா­கப் பணி­யாற்­றி­ய­வர், இப்­போது தனது குருவை இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளார்.

அதென்ன... 'டெவில்'?

"தலைப்­பைக் கேட்­ட­தும் இது பேய்ப்­ப­டம் என்று நினைக்­கத் தோன்­றும். உண்­மை­யில் மனித மனம்­தான் பேய். நிஜப் பேய்­கள் நம்மை ஒன்­றுமே செய்­யாது.

"இப்­போ­தெல்­லாம் மனி­தர்­கள்­தான் பேய்போல் நடந்­து­கொள்­கிறார்­கள். எல்லா மனி­தர்­க­ளுக்­குள்­ளும் ஒரு 'டெவில்' இருக்­கிறது. அதனை மையப்­ப­டுத்­தி­ய­து­தான் இப்­ப­டம்," என்­கி­றார் ஆதித்யா.

திகில் உச்­சத்தைத் தொடும் படங்­க­ளுக்­கான பட்­டி­ய­லில் 'டெவில்' பட­மும் இடம்­பெ­றும் என்று நம்­பிக்­கை­யு­டன் குறிப்­பிடு­ப­வர், ஒவ்­வொரு ரசி­க­ரை­யும் மிரள வைக்­கும் படைப்பை உரு­வாக்கி உள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"பெண்­கள்­தான் உல­கின் மிகப்­பெ­ரிய சக்தி. ஆனால், அந்­தச் சக்தி என்­ன­வென்று அவர்களுக்கே தெரி­ய­வில்லை. அதை உணர்த்து­வது­தான் 'டெவில்' படத்­தின் ஒரு­வ­ரிக் கதை.

"நாய­க­னாக விதார்த், நாய­கி­யாக பூர்ணா நடித்­தி­ருக்­கி­றார்­கள். விதார்த் வழக்­க­றி­ஞ­ராக வரு­கி­றார். அர்ப்­ப­ணிப்­போடு நடிக்­கக்­கூ­டிய கலை­ஞர். பூர்­ணா­வைப் பற்­றிச் சொல்­லவே வேண்­டாம்.

"ஏற்­கெ­னவே ஒரு படத்­திற்­காக மொட்டை அடித்­துக்­கொண்­ட­வர். எந்த நடிகை தன் முடியை இப்­ப­டித் தியா­கம் செய்ய முன்வரு­வார்?

"பூர்ணா நடித்­தால் நம் கதைக்கு ஒரு நல்ல பரி­ணா­மம் கிடைத்­து­வி­டும். இப்­ப­டத்­திற்­காக, அவ­ருக்கு தேசிய விருது கிடைக்­கும் என்ற நம்­பிக்கை இருக்­கிறது. இவர்­க­ளு­டன் இன்­னொரு நாய­க­னாக ஆதித் அருண் நடித்­துள்­ளார். மிஷ்­கின் சாரும் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் தோன்­று­கி­றார். அது­கு­றித்து அதி­கம் சொல்ல இய­லாது.

"மிஷ்­கின் சாரின் இசை ஆர்­வத்­தை­யும் ஞானத்­தை­யும் சிறு­ வ­ய­தி­ல் இ­ருந்தே பார்த்து வரு­கி­றேன். மேற்­கத்­திய இசை தொடர்­பான விருப்­ப­மும் ஆழ்ந்த அறி­வும் அவ­ருக்கு இருக்­கிறது. பாடல்­களை என் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப தந்­துள்­ளார். மேலும், நெஞ்­சைப் பதை­பதைக்க வைக்­கும் காட்­சி­களும் உண்டு. அதற்கு, மிஷ்­கின் சார் இசை­ய­மைத்­தால் பொருத்­த­மாக இருக்­கும் என்று நினைத்­தேன். கதை­யைக் கேட்­ட­துமே இசை­ அமைக்க சம்­ம­தித்­து­விட்­டார்," என்­கி­றார் ஆதித்யா.