'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மணி
ரத்னம் 'லைகா நிறுவனம்' சார்பில் ரஜினியை வைத்து படம் இயக்குவார் என்ற தகவல்கள் முன்பு வெளியாயின. அதனால் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கையில் தற்பொழுது மணிரத்னம் ரஜினிக்குப் பதில் கமலை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்ற செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
35 ஆண்டுகளுக்கு முன்பு
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' படம் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இன்றும் மிகச் சிறந்த
இந்திய படங்களின் பட்டியலில் 'நாயகன்' படமும் இடம்பெற்றிருக்கிறது.
இந்நிலையில், நேற்று கமல்ஹாசனின் பிறந்தநாள். அன்றைய தினம் கமல் தன்னுடைய அடுத்த படத்தைப் பற்றி அறிவிப்பார் என்று கோடம்பாக்கம் காத்திருந்தது.
ஆனால், இயக்குநர் மணிரத்னம் ரஜினிக்குப் பதில் கமலை வைத்து படம் எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்த காணொளி ஒன்றை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.
கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ்', உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட்ஸ்', மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கிஸ்' நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார்.
இந்தக் கூட்டணி மீண்டும் 35
ஆண்டுகளுக்குப் பிறகு இணை
வதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'பொன்னியின் செல்வன்' படம் வெளியான உடனேயே பலரும் இரண்டாம் பாகம் எப்போது என்று கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.
அதுபற்றி இயக்குநர் மணிரத்னம் கூறுகையில், "நான் கல்லூரியில் படிக்கும்போது ஐந்து பாகங்களையும்
ஓவியர் மணியத்தின் ஓவியங்களுடன் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
"சோழர்களுடைய நிலப்பரப்புகள், குதிரைகள், கதாபாத்திரங்கள், பழுவேட்டரையரின் இரட்டை மீசை, இவை யாவும் என் மனதைவிட்டுப் போகவே இல்லை.
"மணியம் ஓவியம் இல்லாமல் இந்தக் கதையைப் படித்திருக்க முடியாது. மணியம்தான் அடித்தளமாக இருந்தார்.
"ஆழ்வார்க்கடியான் நம்பி என்பவர் குடுமியோடு மதில் மேல் வெறும் தலை மட்டும் வைத்துக் கொண்டு இருப்
பவர். நந்தினி என்றால் ஒரு ஆண்டாள் கொண்டை தேவைப்படுகிறது என்பதை அவரே சுலபமாக வரை
யறுத்துக் கொடுத்துவிட்டார்.
"ஆனால், அவர் அதைச் சாதாரணமாக வரையவில்லை. அவரும் அந்தக் காலத்தில் எப்படி இருந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து விளக்கத்துடன் தான் வரைந்து கொடுத்திருக்கிறார். ஆகையால், நான் அந்த அடித்தளத்தை மீறிப் போகவில்லை.
முதல் விஷயம், இந்த தலைமுறையினருக்கு சுலபமாக கதைப் புரிய வேண்டும், இரண்டாவது சோழர் காலத்தை குறிக்க வேண்டும்.
"இதை ஜெயமோகன் மிக எளிமையாகச் செய்தார். பாரம்பரிய தமிழ்தான். ஆனால், குறுகிய வாக்கியங்களாக எழுதினார். அது உணர்ச்சியுடன் நடிப்
பதற்கும் படப்பிடிப்பு நடத்துவதற்கும் மிகப் பெரிய அனுகூலமாக இருந்தது.
"ஐந்து பாகங்கள்கொண்ட இந்தக் கதையை இரண்டு படங்களிலேயே கொண்டு வருவதற்கு சில காட்சி
களைத் தியாகங்கள் செய்ய வேண்டி இருந்தது.
"மேலும், முதல் பாகம் பார்க்காதவர்களுக்கும் இரண்டாவது பாகம் புரிய வேண்டும். இந்த இரண்டு பாகமும் தனியாகவும் இருக்க வேண்டும், சேர்ந்து இருந்தால் இன்னமும் நன்றாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் எடுத்தோம்.
"இரண்டாம் பாகத்தை முடித்து விட்டோம். அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதியன்று திரைகாணும்," என்று கூறினார் மணிரத்னம்.

