சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகின்றது. பருவ மழையை முன்னிட்டு சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ளதால் பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன.
அண்மையில் இந்தப் பள்ளத்தில் தனியார் செய்தி நிறுவன ஊழியரும் மாங்காட்டில் தனியார் நிறுவன ஊழியரும் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். இவ்வாறு தொடர் விபத்தால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இந்த
விபத்துகள் குறித்து இயக்குநர் சீனுராமசாமி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "நகரத்தைச் சரிசெய்து நெறிப்படுத்த வேண்டும். அது ஒரு சிகைத் தொழிலாளி முடித்திருத்தம் செய்வதுபோல ஓரத்திலிருந்து செய்து வரவேண்டும்.
"முழு நகரத்தையே தோண்டினால் பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழத்தான் செய்வான்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

