பட்டத்து அரசனாக அதர்வா

பட்டத்து அரசனாக அதர்வா

1 mins read
109fbd15-45f7-4a1a-888a-2729b1684dab
-

'சண்டிவீரன்' திரைப்படம் மூலம் இணைந்த நடிகர் அதர்வா, இயக்குநர் சற்குணம் ஜோடி இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர். 'லைகா' நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன், ஜிகேஎம் தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு பட்டத்து அரசன் என்று பெயரிட்டு இருக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் சுவரொட்டியை லைகா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்­தப் படத்­தில் ராஜ்­கி­ரண் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். ஜிப்­ரான் இசை­ய­மைக்­கி­றார்.

இது ஒரு கிராமியப் பின்னணி கொண்ட திரைப்படமாக இருக்கும் என்பது சுவரொட்டி மூலம் அறியப்படுகிறது. அதனால் படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர், திருவையாறு பகுதிகளைச் சுற்றி நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.