இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்
படம் 'கட்டா குஸ்தி'. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.
'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்பொழுது
இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
'கட்டா குஸ்தி' திரைப்
படத்தின் இரண்டு சுவரொட்டிகள் வெளியான நிலையில் படம் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படம் கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டையைக் கருப்பொருளாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

