பாசப் பிணைப்பை அலசும் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்'

பாசப் பிணைப்பை அலசும் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்'

1 mins read
9aa443c9-4428-49ea-879a-410e39b572bc
'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்தில் சந்தானம். -

'ஏஜெண்ட் கண்­ணா­யி­ரம்' படத்­தில் சந்­தா­னத்தை ரசி­கர்­கள் இது­வரை பார்க்­காத கோணத்­தில் காட்ட முயற்சி செய்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர் மனோஜ் பீதா.

இந்தப் படத்­தில் ஏஜெண்ட் கண்­ணா­யி­ர­மா­கத்­தான் தெரி­வாரே தவிர சந்­தா­ன­மாக தெரிய மாட்­டார் என்­றும் பேட்டி ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இது சம­யங்­க­ளு­டன் தொடர்­பு­டைய ஒரு பிரச்­சி­னையை மைய­மாக வைத்து உரு­வாகி உள்ள படம். ஒரு ­வ­கை­யில் துப்­ப­றி­யும் கதை என்று சொல்­ல­லாம்.

"ஆனால் எந்­த­வொரு சம­யத்­தை­யும் குறிப்­பிட்டு படத்தை எடுக்­க ­வில்லை. மேலும், ஒரு தாய்க்­கும் மக­னுக்­கு­மான பாசப் பிணைப்­பை­யும் இந்­தப் படம் முழு­மை­யாக அலசும்.

"அதே­ச­ம­யம் நகைச்­சுவை, அடி­தடி, காதல் உள்­ளிட்ட வணிக அம்­சங்­க­ளை­யும் குறை­வின்­றிச் சேர்த்­துள்­ளோம். ஆனால் எது­வுமே வலிய திணிக்­கப்­பட்­ட­தாக இருக்­காது. சந்­தா­னத்­தின் திரைப்பய­ணத்­தில் இது மிக முக்­கி­ய­மான பட­மாக இருக்­கும்.

"இது சந்­தா­னம் நடிக்­கும் வழக்­க­மான நகைச்­சு­வைப் படம் அல்ல. அவ­ரது அதி­ரடி வச­னங்­கள் ஏதும் இருக்­காது. வழக்­க­மான காதல் காட்­சி­க­ளை­யும் ரசி­கர்­கள் எதிர்­பார்க்க வேண்­டாம்," என்­கிறார் இயக்­கு­நர் மனோஜ்.