நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் எதிர்வரும் 28ஆம் தேதி நடக்க உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்கிறார்கள். அதன்பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திரைப்பிரபலங்களை அழைத்து நடத்த உள்ளனர். அண்மையில்தான் இருவரும் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்தார் கௌதம். இருவரும் 'தேவராட்டம்' என்ற படத்தில் இணைந்து நடித்தபோது காதல் மலர்ந்தது. அதன் பிறகு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
நயன்தாரா வழியைப் பின்பற்றி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங் களில் கவனம் செலுத்தப் போவதாகச் சொல்கிறார் லட்சுமி மேனன். இதுபோன்ற வாய்ப்புக்காக பொறுமை யுடன் காத்திருந்ததற்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாம். 'மலை' என்ற தலைப்புடன் நாயகியை முன்னிலைப் படுத்தி உருவாகும் படத்தில் லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இது 'அறம்' படத்தின் மூலம் நயன் தாராவுக்கு கிடைத்த பாராட்டுகளுக்கு இணையாக தமக்கும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுத் தரும் என்கிறார் லட்சுமி.
மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான 'சர்தார்' படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியீடு காண்கிறது. இதனால் கார்த்தி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
'சர்தார்' படத்தில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா உள்ளிட்ட பலரர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ள இப்படம், அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்கு களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மொத்தம் நூறு கோடிக்கும் மேல் வசூல் கண்டுள்ள நிலையில், இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுனின் ஆஹா ஓடிடி தளத்தில், 'சர்தார்' படத்தைக் கண்டு ரசிக்கலாம்.

