செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f9547e36-7718-4265-a1bc-3a7bdfadeb39
-

'கற்றது தமிழ்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ராம் தற்பொழுது நிவின் பாலி, அஞ்சலியை வைத்து 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தை எடுத்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கிறார். இந்தப் படத்தில் நிவின் பாலியின் முதல் சுவரொட்டியை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். தற்பொழுது இந்த சுவரொட்டி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தனுஷ் நடித்திருக்கும் 'வாத்தி' படத்தின் இயக்குநர் வெங்கி அத்லூரி படம் பற்றி கூறுகையில், "எனக்கு தனுஷ் சார் மீது பெரிய மரியாதை உண்டு. அவரை எப்படி வேண்டுமென்றாலும் செதுக்கிப் பார்க்கலாம். எல்லோருக்கும் அவரை வைத்து ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருப்பதை எந்த இயக்குநரிடம் கேட்டாலும் சொல்வார்கள். தனுஷ் போன்ற முன்னணி நடிகரை வைத்து படம் எடுக்கும்போது நிறைய உழைப்பும் புத்திசாலித்தனமும் வேண்டும். உணர்வுபூர்வமாகவும் கதையைச் சொல்லவேண்டும். நம் மக்களின் மனோபாவம் ஆந்திராவாக இருந்தாலும் தமிழ்நாடாக இருந்தாலும் ஒன்றுதான். தனுஷ் முழுசாக வெளிப்பட்டால் பல ஆச்சரியங்கள் கிடைக்கும். அதில் 'வாத்தி'யும் ஒன்று,'' என்று நிதானமாகப் பேசினார் இயக்குநர். ஆந்திராவின் கவனத்திற்குள்ளாகி தமிழிலும் கால் பதிக்க வந்திருக்கிறார் வெங்கி அத்லூரி.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் `காந்தாரா'. ரிஷப் ஷெட்டி, அந்தப் படத்தை இயக்கி, நடித்தும் இருந்தார். கன்னட மொழியில் வெளியான 'காந்தாரா' மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ரிஷப் ஷெட்டி, ``தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பலரிடமிருந்தும் படம் எடுக்க அழைப்புகள் வருகின்றன. ஆனால், நான் கன்னடத்தில் மட்டுமே படம் எடுக்க விரும்புகிறேன்," என்றார் ரிஷப் ஷெட்டி.