'ஏமாறாதீர்கள் தலைவா!'

'ஏமாறாதீர்கள் தலைவா!'

1 mins read
f6903921-1fcd-4e5b-b78e-76fae72263cc
-

ஜெயம் ரவி நடிப்­பில் 2019ஆம் ஆண்டு வெளி­யான 'கோமாளி' படத்­தின் மூலம் இயக்­கு­ந­ராக அறி­மு­க­மா­ன­வர் பிர­தீப் ரங்­க­

நா­தன். தற்­போது இவர் இயக்கி, நாய­க­னாக நடித்­தி­ருக்­கும் படம் 'லவ் டுடே'. இப்­ப­டம் அண்­மை­யில் வெளி­யாகி ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்­பைப் பெற்று வரு­கிறது.

இந்­நி­லை­யில், 'லவ் டுடே' படத்­தைப் பார்த்துவிட்டு நடி­கர் ரஜி­னி­காந்த், பிர­தீப் ரங்­க­நா­தனை தன் வீட்­டிற்கு வர­வ­ழைத்து, வாழ்த்து தெரி­வித்தார்.

இது­கு­றித்து பிர­தீப் ரங்­க­நா­தன் தனது சமூக வலை­த­ளப் பக்­கத்­தில், "நான் இன்­னும் என்ன கேட்க முடி­யும்? சூரி­ய­னுக்கு அரு­கில் இருப்­ப­து­போல் இருந்­தது. அவ்­வ­ளவு சூடு. இறுக்­க­மான அணைப்பு, அந்த கண்­கள், சிரிப்பு, அன்பு. என்ன ஒரு ஆளுமை. சூப்­பர் ஸ்டார் ரஜி­னி­காந்த் 'லவ் டுடே' படத்தைப் பார்த்து வாழ்த்­தி­னார். நீங்க சொன்ன வார்த்­தை­களை மறக்க மாட்­டேன் சார்," என பதி­விட்­டுள்­ளார்.

'கோமாளி' படத்­தில் ரஜி­னி­காந்த்தை கிண்­டல் செய்­த­வர்­தான் இந்த பிர­தீப் ரங்­க­நா­தன். அவ­ரையே அழைத்து நடி­கர் ரஜி­னி­காந்த் பாராட்டி இருப்­ப­தைப் பார்த்து, "இப்­படி இருக்­கா­தீர்­கள் தலைவா! உங்கள் நல்ல மனதைப் புரிந்து கொள்ளாதவர்கள் இவர்கள். இது

பச்­சோந்தி கூட்­டம். எச்சரிக்கையாக இருங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.