மீண்டும் இணையும் பிரிந்த ஜோடி

மீண்டும் இணையும் பிரிந்த ஜோடி

3 mins read
fdb3efeb-777d-442b-8186-ad4bdcd65e11
-

தென்­னிந்­தி­யா­வின் முன்­னணி நடிகை

களின் ஒரு­வ­ராக வலம் வரு­ப­வர் சமந்தா. இவர் தனக்­கென்று தனி ரசி­கர் பட்­டா­ளத்­தையே உரு­வாக்­கி­யுள்­ளார். இவர் நடிப்­பில் வெளி­யா­கும் படங்­கள் அனைத்­தும் ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு பெற்று வரு­கிறது. இவர் நடிப்­பில் ஹரி, ஹரிஷ் இயக்­கத்­தில் உரு­வா­ன 'யசோதா' திரைப்படம் அண்­மை­யில் வெளி­யா­னது.

இந்­தத் திரைப்­ப­டம் தமிழ், மலை­யா­ளம், கன்­ன­டம், இந்தி மொழி­களில் வெளி­யா­கி­யுள்­ளது. எம்.சுகு­மார் ஒலிப்­ப­திவு செய்­துள்ள இந்­தப் படத்­திற்கு மணி­சர்மா இசை­ய­மைத்­துள்­ளார். படம் வெளி­யா­னது முதல் நல்ல வர­வேற்பு பெற்று, நேர்­ம­றை­யான விமர்­ச­னங்­க­ளைப் பெற்று வரு­கின்­றது.

விடு­முறை நாளான ஞாயிற்­றுக்­

கி­ழமையன்று அடாத மழை­யி­லும் படத்­தின் விமர்­ச­னத்­தைப் பார்த்த மக்­கள் திரை­ய­ரங்­கிற்­குச் சென்று படத்­தைப் பார்த்­த­னர். அன்­றைய தினம் மட்­டும் தமிழ்நாட்டில் ரூ.3.50 கோடி வசூ­லித்து உள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் மட்­டும்

400,000 டாலர்­

க­ளுக்கு

மேல் வசூலில் சாதனை செய்­துள்­ளது‌.

இந்­தப் படத்­தில் நடித்­தி­ருக்­கும் சமந்­தா­வின் நடிப்பு பல­ரா­லும் பாராட்­டப்­பட்டு வரு­கிறது. அவர் உடல்­ந­லம் சரி­யில்­லா­த­போ­தும் அதைப்­பற்றி படக்­கு­ழு­வி­ன­ரி­டம் கூட சொல்­லா­மல் படத்தை முடித்­துக்­கொ­டுத்­த­து­டன் மருத்­து­வ­ம­னை­யில் இருந்­த­படி படத்­திற்கு குரல் பதிவு செய்து இருந்­தார்.

மேலும் சிகிச்­சை­யின்­போதே அவர் விளம்­ப­ர­தா­ரர் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார். இந்­தப் படத்­திற்­காக கடின உழைப்­பைக் கொடுத்து இருக்­கி­றார் சமந்தா.

அதனைப் பாராட்­டும் வகை­யில் இயக்­கு­நர்கள் தங்­கள் படக்

­கு­ழு­வி­ன­ரு­டன் இணைந்து சமந்­தா­வின் வீட்­டிற்­கே சென்று படத்­தின்

வெற்றியைப் பற்றி கலந்து பேசி கொண்­டா­டி­னர்.

இந்­தப் படத்­தில் அவ­ரின் அர்ப்ப­ணிப்­பைப் பார்த்து பல இயக்­கு­நர்­கள் அவரை அணுகி, தங்­கள் படங்­களில் நடிக்க கேட்டு வரு­கி­றார்­கள். இந்­நி­லை­யில் அவர் முன்­னாள் கண­வர் நாக­சை­தன்­யா­வு­டன் இணைந்து ஒரு படத்­தில் நடிக்க இருக்­கி­றார்.

இவ­ரும் தெலுங்கு நடி­கர் நாகார்­ஜு­னா­வின் மக­னும் நடி­க­ரு­மான நாக சைதன்­யா­வும் காத­லித்து திரு­ம­ணம் செய்து கொண்­டார்­கள். மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வந்த இவர்­கள் சென்ற ஆண்டு பிரி­வ­தாக அறி­வித்­தார்­கள்.

பிரி­வுக்­குப் பிறகு இரு­வ­ரும் தங்­க­ளின் திரைப்­பட வாழ்க்­கை­யில் கவ­னம் செலுத்தத் தொடங்கினார்கள். இரு­வ­ரும் தற்­போது மும்­மு­ர­மாக தங்­க­ளின் திரைப்­

ப­டங்­களில் நடித்து வரு­கின்­றார்­கள்.

இந்­நி­லை­யில், இரு­வ­ரும் ஒரு படத்­தில் நடிக்க இருக்­கி­றார்­கள். "தனிப்­பட்ட வாழ்க்கை வேறு, வேலை வேறு. அத­னால் இரு­வ­ரும் இணைந்து நடிப்­ப­தில் எந்த பிரச்­சி­னை­யும் இருக்­காது. அவர்­கள் சேர்ந்து நடித்­தால் அந்­தப் படம் நன்­றாக ஓடும் என்­பது இரு­வ­ருக்­கும் தெரி­யும். சமந்தா மீது நாக­சைத்­தன்­யா­வுக்கு இன்­னும் அக்­கறை இருக்­கின்­றது.

"அவர் சமந்­தாவை தனது தோழி­யாக எண்­ணு­கின்­றார் என்­பது நன்­றாக தெரி­கின்­றது. நடந்­தது நடந்து விட்­டது என மீண்­டும் இருவரும் இணைந்து நடிக்க முடிவு செய்து இருக்­கின்­றார்­கள்," என்று அவர்­க­ளுக்கு நெருக்­க­மான ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

சமந்­தாவைப் பிரிந்த பிற­கும் நாக­சை­தன்யா தனக்கு ஏற்ற 'ரீல்' ஜோடி சமந்­தா­தான் என கூறி­யி­ருந்­தார். அதைப் பார்த்த ரசி­கர்­கள் மீண்­டும் அவர்­கள் சேர வாய்ப்பு இருப்­ப­தாக பேசி வந்தனர். தற்­போது இரு­வ­ரும் மீண்­டும் சேர்ந்து நடிக்கப் போகின்­றார்­கள் என அறிந்த ரசி­கர்­கள் மகிழ்ச்சி அடைந்­தி­ருக்­கின்­றார்­கள்.