எண்பதுகளில் திரையுலகில் தடம் பதித்த நடிகர்கள், நடிகைகள் ஒவ்வோர் ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பை வளர்த்து வருகின்றனர். இந்நிகழ்வின் 10வது ஆண்டு கொண்டாட்டத்தை 2019ல் சிரஞ்சீவி தனது ஹைதராபாத் இல்லத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார்.
இடையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மூன்று ஆண்டுகள் ஒன்றுகூடவில்லை. இந்த ஆண்டு கட்டாயம் ஒன்றுகூடல் வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பூனம் தில்லானும் ஜாக்கி ஷெராஃப்பும் இணைந்து மும்பையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர், சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.