செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a45febfd-a594-4879-a2fc-f6678ba8a03c
-
multi-img1 of 2

கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி

92 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றும் தாதியர் படிப்பில் சேர வசதி இல்லை என்பதால் படிப்பைத் தொடர முடியாமல் இருந்திருக்கிறார். அவரின் நிலையை மாவட்ட ஆட்சியர் மூலம் அறிந்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மாணவியின் கல்லூரி படிப்பு, அவரின் விடுதி கட்டணம் உள்ளிட்டவற்றைத் தானே ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தத் தகவலைப் பார்த்த கேரள ரசிகர்கள் உட்பட பலர் அல்லு அர்ஜூனைப் பாராட்டி வருகிறார்கள்.

விஜய் நடிக்கும் 'வாரிசு' படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என்றும் மொழி மாற்று படங்களுக்கு மிச்சமிருக்கும் திரையரங்கு களை மட்டும் ஒதுக்கினால் போதும் என்று தெரிவித்துள்ளது. 'வாரிசு' படம் தமிழ்ப் படம் என இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளதால் திட்டமிட்ட தினத்தில் இந்தப்படம் வெளியாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படம் கோலார் தங்க வயலின் வரலாற்றுப் பின்னணியைக்கொண்டு படமாக்கப்படுகிறது. இந்தப் படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் 'பான் இந்தியா' திரைப்படமாக உருவாகும் இப் படத்தை நெட்பிளிக்ஸ் ரூ.35 கோடிக்கு வாங்கி உள்ளது.