'துரோகம் செய்துவிட்டார் விஜய்'

'துரோகம் செய்துவிட்டார் விஜய்'

2 mins read
a97130d7-09dc-43cf-a280-e5d88d9a3970
-

தயா­ரிப்­பா­ளர் கே.ராஜன் நேர்­கா­ணல் ஒன்­றில், "தமிழ் சினி­மா­வில் விஜய் முன்னணி நடி­கர் என்­ப­தற்கு மாற்­றுக்­க­ருத்தே கிடை­யாது. ஆனால், அவ­ருக்குத் தெலுங்­கில் வாய்ப்­பு­கள் குறைவு. அவ­ரை­விட சூர்­யா­வுக்­குத்­தான் வாய்ப்­பு­கள் அதி­கம். அப்­படி இருக்­கும்­போது தெலுங்குப் படத் தயா­ரிப்­பா­ளருக்­கும் இயக்­கு­ந­ருக்­கும் வாய்ப்பு கொடுத்து விஜய் பெரிய தவறு செய்­து­விட்­டார்.

"தெலுங்குத் திரை­யு­ல­கம் தயா­ரிப்­பா­ளர், விநி­யோ­கிப்­பா­ளர்­க­ளின் கட்­டுப்­பாட்­டில் உள்­ளது. ஆனால், தமிழ்த் திரை­யு­ல­கில் அதுபோன்ற எந்த ஒரு கட்­டுப்­பா­டும் கிடை­யாது.

"தெலுங்குத் திரை­யு­ல­க நடி­கர்­கள்­தான் வெற்றி பெற­வேண்­டும் என்று அவர்­கள் நினைப்­ப­தில் தவறு இல்லை.

"பொங்­க­லுக்கு பவன் கல்­யாண், பால­கி­ருஷ்ணா படங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்­து­விட்டு விஜய் நடித்­தி­ருக்­கும் 'வாரிசு' படத்­திற்கு ஒரு சில திரை­ய­ரங்கு­களை மட்­டுமே ஒதுங்­கி­யுள்­ளது தெலுங்குத் திரை­யு­ல­கம்.

"ஆனால், தமி­ழ­கத்­தில் தயா­ரிப்­பா­ளர் சங்­கம் சரி­யில்லை. வேறு மொழி­களில் இருந்து மொழி­மாற்­றம் செய்­யப்­பட்ட 'பாகு­பலி', 'கேஜி­எஃப்' போன்ற படங்­க­ளுக்கு திரை­ய­ரங்­கு­களை வாரி வழங்­கு­கி­றார்­கள். வந்­தாரை வாழ­வைக்­கி­றேன் என்று சொல்­லிக்கொண்டு இங்கு இருப்­ப­வர்­களை வாழ­வி­ட­மாட்­டேன் என்­கி­றார்­கள்.

"நடி­கர் விஜய் தனது சம்­ப­ளத்தை ரூ.125 கோடி வரை ஏற்­றியிருப்­பது தயா­ரிப்­பா­ள­ருக்குச் செய்யும் பெரிய துரோ­கம். அத­னால், அவர் தனது மதிப்பைப்

பெரி­துப­டுத்த நினைக்­கி­றார். ஆனால், தமிழ் இயக்­கு­ந­ருக்­கும் தமிழ் தயா­ரிப்­பா­ள­ருக்­கும் லாபம் கிடைக்­கும் வகை­யில் அவர் செயல்­பட வேண்­டும். அப்­படி விஜய் செய்­ய­வில்லை. அதன் பல­னைத்­தான் 'வாரிசு' படத்­தின் மூலம் அனு­ப­விக்க காத்­தி­ருக்­கி­றார்," என்று தயா­ரிப்­பா­ளர் குற்­றம் சாட்டி கார­சா­ர­மாக பேசி­யுள்­ளார். இவருடைய பேச்சு தற்பொழுது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், கமல்ஹாசன் தயாரித்து நடித்த 'விக்ரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக மீண்டும் விஜய்யை வைத்து விஜய்யின் 67வது படத்தை இயக்கப் போகிறார்.

அந்தப் படத்தை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ்' தயாரிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

தனது முந்தைய படங்களின் கதா பாத்திரங்களை புதிய படங்களில் இணைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.இந்தப் படத்திலும் 'விக்ரம்' படத்தில் கமல் நடித்த கதாபாத்திரமும் இடம்பெறுவதோடு, கமல்ஹாசனும் கௌரவத் தோற்றத்தில் விஜய்யுடன் நடிப்பார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.