தமிழில் வெளியாகும் படங்களை உதயநிதி மிரட்டி, வாங்கி, 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் மூலம் திரையரங்குகளில் வெளியிடுவதாக பலர் அவதூறு பேசத் தொடங்கியதால் உதயநிதியின் தந்தை
ஸ்டாலின், "இந்த வேலை எல்லாம் தேவை இல்லை. அதை விட்டுவிடு," என்று மகன் உதயநிதிக்கு அறிவுரை கூறியுள்ளார். அதனால் உதயநிதியும் படங்களை வாங்கி வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளப் போவதாக கூறியிருந்தார்.
அதைக் கேள்விப்பட்ட கமல், முதல்வர்
ஸ்டாலினைச் சந்தித்து, "தம்பி உதயநிதியைத் தொடர்ந்து படங்களை வாங்கி வெளியிடச் சொல்லுங்கள். அவர் வந்தபிறகுதான் சினிமாத்துறை நன்றாக இருக்கிறது. வெளிப்படையான, உண்மையான கணக்குகளைக் கொடுக்கிறார்கள். இது காசு போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் திரைத்துறைக்கும் நல்லது," என்று கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து முதல்வரும், "அதிகப் படங்களை வாங்காதே. குறைவாகச் செய்துகொள்," என்று அனுமதி அளித்ததால் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு இருக்கிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

