பிரதீப்: இளையர்களுக்கு கிடைத்த வெற்றி

பிரதீப்: இளையர்களுக்கு கிடைத்த வெற்றி

2 mins read
0ab20792-d05e-489a-b2c6-e15777df235f
'லவ் டுடே' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி. -

சில படங்­கள் குறைந்த செல­வில் எடுக்­கப்­பட்­டா­லும், பல கோடி­கள் வசூ­லித்­துக் கொடுக்­கும். உடனே இது அதிர்ஷ்­டத்­தால் கிடைத்த வெற்றி என்­பார்­கள். ஆனால் மக்­கள் விரும்­பும் அம்­சங்­களை சரி­யான கல­வை­யில் கொடுத்­துள்ளனர் என்­பதே உண்­மைக் கார­ண­மாக இருக்­கும். அப்­ப­டிப்­பட்ட படங்­களில் அண்­மைய வெளி­யீ­டான 'லவ் டுடே' வெற்றி பெற்­றுள்­ளது.

ஆனால் இந்த வெற்­றிக்­குப் பிறகு மிகுந்த அடக்­கத்­து­டன் அடுத்­த கட்ட நகர்வு குறித்து அமை­தி­யாக யோசித்­துக்கொண்­டி­ருக்­கி­றார் இயக்­கு­நர் பிர­தீப் ரங்­க­நா­தன். நகைச்­சு­வை­யும் யதார்த்­த­மும் கலந்து சொல்­லப்­பட்ட கதை என்பதால் ரசி­கர்­க­ளின் ஆத­ர­வுடன் தயா­ரிப்­புத் தரப்­புக்­குப் பல கோடி­களை பெற்­றுத் தந்­துள்­ளது 'லவ் டுடே' திரைப்படம்.

"பொது­வாக ஒரு மனி­தனை நன்றாகச் சிரிக்க வைப்­பது மிக கடி­ன­மான வேலை. சிரிப்­பு­டன் நல்ல கருத்­து­க­ளைச் சொல்லி, அவற்­றை­யும் புரிய வைத்­தால்­தான் வெற்­றி­பெற முடி­யும். இது­போன்ற கதை­கள் அனைத்­தும் ஏற்­கெ­னவே சொல்­லப்­பட்­டு­விட்­டது என்­று­தான் எல்­லா­ருமே நினைக்­கி­றார்­கள்.

"எனவே இந்­தக் கதை­க­ளைச் சொல்­லும் முறை­யில்­தான் வித்­தி­யா­சம் தேவைப்­ப­டு­கிறது. நான் எந்­த­வொரு கதா­பாத்­தி­ரத்­தை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தும்­போது அதி­கம் யோசிப்­பேன். புதி­தாக ஏதா­வது சொல்ல வேண்­டும் என்­ப­தில் விடாப்­பி­டி­யாக இருப்­பேன். எனக்கு ஓசை­களில் கைத்­தட்­டல்­தான் மிகவும் பிடிக்­கும்.

"நல்ல கதைக்­கான கரு என்­பது ஒரு வரி­யில்­கூ­ட கிடைக்­கும். அதன் அடுத்­த கட்­டம் என்­ன­வாக இருக்­கும் என்­பதை அதைப் பின்­தொ­டர்ந்­தால்­தான் தெரி­யும். அதன் பிறகு அதை அழ­காக முடிக்க முடியுமா என்று யோசிப்­பேன். 'லவ் டுடே' படத்தை நானே இதற்கு முன்பு குறும்­ப­ட­மாக இயக்­கி­யுள்­ளேன். அது என்­னி­டம் பத்­தி­ர­மாக உள்­ளது. பொழு­து­போக்­கும் நகைச்­சு­வை­யு­மாக ஒரு நல்ல செய்­தியை மக்­க­ளி­டம் கொண்டு செல்ல முயற்சி செய்­தேன். அதற்­குத்­தான் பாராட்டு கிடைத்­துள்­ளது," என்­கிறார் பிர­தீப் ரங்­க­நா­தன்.

இந்­தப் படம் செய்த முத­லீட்டுக்­கு­ரிய வசூ­லைத் தரும் என்று மட்­டுமே நினைத்­தா­ராம். ஆனால் மக்கள் கூடிக்­கூடி சேர்ந்து ரசித்துப் படம் பார்ப்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கவே இல்­லை­யாம்.

"எப்­ப­டியோ மக்­க­ளின் ரச­னை­யைத் தொட்­டு­விட்­டேன். அது­தான் வசூ­லை­விட அதிக மகிழ்ச்சி தரு­கிறது. ரசி­கர்­கள் என்னை ஏற்­றுக்­கொண்­ட­னர் என்­பதை நினைத்து நெகிழ்ந்து போயுள்­ளேன். இந்த வெற்­றியை அடிப்­ப­டை­யாக வைத்­துக்­கொண்டு அடுத்­த­டுத்த கட்­டங்­க­ளுக்­குச் செல்ல வேண்­டும்.

"என் வாழ்க்­கை­யில் நான் ஆசைப்­பட்ட பல விஷ­யங்­கள் நடந்­துள்­ளன. புதிய களம், புதிய நடி­கர்­கள் என தமிழ்­நாட்டை எல்­லோரும் கவ­னிக்­கி­றார்­கள். கதை அம்­சத்­திற்­கும் வித்­தி­யா­சத்­திற்­கும் உணர்­வுக்­கும் மதிப்­ப­ளிக்க ஆரம்­பித்து விட்­டார்­கள். இளையர்களுக்கு வழி பிறந்துவிட்­ட­து என சொல்­லத் தோன்­று­கிறது. அந்த வகை­யில் இந்த வெற்­றி­யைக் கொண்­டா­டு­கி­றேன்," என்­கி­றார் பிர­தீப்.