தாம் தாய்மை அடைந்தி ருப்பதாக வெளியான தகவல் உண்மை அல்ல என்று நடிகை நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார். அண்மையில்தான் இவரும் நடிகர் ஆதியும் திருமணம் செய்துகொண்டனர். முன்ன தாக, 'யாகாவாராயினும் நா காக்க', 'மரகத நாணயம்' போன்ற படங்களில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
தற்போது நிக்கி கல்ராணி தாய்மை அடைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இதனால் அவர் நடிக்கவிருந்த இரு படங்கள் கைவிடப்பட்ட தாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இன்ஸ்டகிராமில் விளக்கம் அளித்துள்ள நிக்கி கல்ராணி, தன்னைப் பற்றி வெளிவந்த தகவல் உண்மையல்ல என்று தெரிவித்துள்ளார்.
"அது வெறும் வதந்தியே. உண்மையிலேயே நான் கர்ப்பமானால் அது குறித்த தகவலை கண்டிப்பாக வெளியிடுவேன். அதைவிட எனக்கு மகிழ்ச்சியான விஷயம் எதுவும் இல்லை," என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் நிக்கி கல்ராணி.
இன்றுள்ள இளம் நடிகைகள் புத்திசாலிகள். திரைப்படங்களை மட்டுமே நம்பி இருக்காமல் இணையத் தொடர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று அனைத்திலும் தலைகாட்டி வருகிறார்கள். அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாத ஆஸ்னா ஸவேரி, தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களுடன் இணைந்து நடனமாடிய இசைத்தொகுப்பு ஒன்று வெளியாகிறது. 'உச்சிமலை காத்தவராயன்' என்பது அந்த தொகுப்பின் தலைப்பு. சரிகம நிறுவனம் தயாரித்து வெளியிடு கிறது. இதில் ஆர்ஜே.விஜய், மாகாபா.ஆனந்த் ஆகியோர் ஆஸ்னாவுடன் இணைந்து ஆடியுள்ளனர். ஆனிவீ இசை அமைத்துள்ளர்,
"வாய்ப்பு ஏதும் இல்லை என்பதால் மூலையில் முடங்கிவிட இயலாது. இந்த இசைத்தொகுப்பு தரமான படைப்பாக உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான் கலைத்துறையில் நீடிக்கும் தகவலை ரசிகர்களுக்கு மறைமுகமாக தெரிவித்துள்ளேன்," என்கிறார் ஆஸ்னா.
அஜித் நடிப்பில் உருவாகும் 'துணிவு' படத்தின் வெளிநாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற் றுள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தை உலக அளவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியிட்டு சாதனை படைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்விட்டனவாம். இதற்கிடையே, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 62வது படத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது.

