ஹரி - ஹரிஷ் இயக்கத்தில் சமந்தாவின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் 'யசோதா'. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த யசோதாவாக நடிக்கும் சமந்தா தன் தங்கையின் மருத்துவ செலவிற்கு பணம் தேவை என்பதால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்
கொடுக்க முடிவு செய்கிறார்.
அதையடுத்து, மூன்று மாதம் ஆன நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு சமந்தாவைப்போல பலர் வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கின்றனர்.
குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் காரணமே இல்லாமல் இறந்து போவதால் பதறும் சமந்தா, இறப்புக்கான காரணம் என்ன என்று ஆராயும்போது பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிந்துகொள்கிறார்.
இறுதியில் சமந்தாவுக்கு என்ன ஆனது என்பதைப் பற்றி சண்டைக் காட்சிகள் நிறைந்த மர்மப் படமாக உருவாகி இருக்கிறது 'யசோதா'.
கடந்த வாரம் வெளியான 'யசோதா' படத்தில் சமந்தா சண்டை காட்சிகளில் மிரட்டி உள்ளார். உடல் நிலைசரியில்லாத போதும் வேறு ஆள் போடாமல் தானே அனைத்து சண்டைக் காட்சிகளிலும் நடிப்பேன் என்று துணிச்சலுடன் நடித்ததை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
வாடகைத்தாய் என்ற பெயரில் நடக்கும் குற்றங்களையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய 'யசோதா' படம் வசூலை வாரிக்
குவித்து வருகிறது.
இந்நிலையில் நடிகை சமந்தா, 'யசோதா' படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்
களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "அன்பான பார்வையாளர்களே, 'யசோதா' படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பும் பாராட்டும்தான் எனக்கு கிடைத்த பரிசாக நான் கருதுகிறேன். திரை
யரங்கில் உங்களின் மகிழ்ச்சியான சத்தமும் கைத்தட்டல்களும் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 'யசோதா' படக்குழுவின் ஒட்டுமொத்த உழைப்புக்கும் பலன் கிடைத்துவிட்டதை நினைத்து மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டேன். என் மகிழ்ச்சிக்கு வார்த்தைகளே இல்லை.
"என்னை நம்பி 'யசோதா' படத்தை கொடுத்த தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்
கிறேன்.
அவரைப்போல இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் ஆகியோருடன்
இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் அற்புதமான நடிகர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி," என்று சமந்தா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது. இந்நிலையில் 9 நாட்களில் இப்படம் ரூ.30 கோடி வசூலை எட்டி இருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்திருந்த இந்தி நடிகர் ரோகித் பட்கர் கூறுகையில், "படத்தில் பணியாற்ற எனக்கு அழைப்பு வந்தபோது கவலையாக இருந்தது. சமந்தா
வுடன் இணைந்து பணியாற்றுவது ஒருவேளை எந்த பொழுதுபோக்கும் இல்லாமல் இருக்குமோ? இல்லை நேரத்துக்கு வந்தோம் போனோம் என வேலை பார்க்கும் விதமாக இருக்குமோ? என்னுடைய வேலைபார்க்கும் பாணியில் நான் சமரசம் செய்துகொள்ள வேண்டி வருமோ? என பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
"எல்லாம் அந்த அற்புத பெண்ணை சந்திக்கும் வரைதான். அதன்பிறகு படப்பிடிப்பு தளத்தில் அவருடன் எனக்கு நிகழ்ந்தது எல்லாமே மறக்க முடியாத இனிமையான அனுபவங்கள்தான்.
"தன்னுடன் பணிபுரியும் ஒவ்வொருவரையும் அவர் அவ்வளவு அழகாக கவனித்துக்கொண்டு எப்போதும் கலகலப்பாகவே வைத்திருந்தார். அவருக்குள் இருந்த ஓர் உண்மையான நாயகனை, ஒரு சூப்பர்ஸ்டாரை, ஒரு நிஜ மனிதனை, ஒரு நிஜ நண்பனை நான் ஒவ்வொரு நாளும் உணர்ந்தேன்," என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

