53வது அனைத்துலக இந்திய திரைப்படத் திருவிழா கோவாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும்.
இந்த விழாவில் நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் "ஏறக்குறைய 40 ஆண்டுகளாக நடிகர், நடன கலைஞர், தயாரிப்பாளர் என 150 படங்களில் பணியாற்றி நடிப்புத் துறையில் நடிகர் சிரஞ்சீவி புகழ் பெற்றுள்ளார்," என்று தனது இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியும் தனது வலைத்தளத்தில், "சிரஞ்சீவி மாறுபட்ட நடிப்புத் திறனால் பல வேடங்களில் நடித்து சில தலைமுறை பார்வையாளர்களின் பாராட்டையும் மரியாதையையும் பெற்றுள்ளார்," என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.

