இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர விழாவைக் கொண்டாடும் விதமாக மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுடன், தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இசை
யமைப்பாளர் இளையராஜா திரைப்படப் பாடலான 'ஜனனி, ஜனனி' என்ற அம்மன் பாடலைப் பாடி, தனது உரையைத் தொடங்கினார்.
"என்னுடைய உணர்வுகளை முழுமையாக எப்படி வெளிப்
படுத்துவது என்று தெரியவில்லை. தமிழ் சங்கமத்தை இந்த புண்ணிய பூமியான காசியில் நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி யோசனை வந்தது என்பதை வியந்து மகிழ்கிறேன். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் புகழும் கொடுக்க வாழ்த்தி விடைபெறுகிறேன்," என்று உணர்ச்சிபொங்க பேசி விடைபெற்றார்.

