செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read

ஜோதிகா 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இவர் இந்தியில் 1998ஆம் ஆண்டு வெளியான 'டோலி சஜா கே ரக்கீனா' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்திய ஜோதிகா, 2001ல் 'லிட்டில் ஜான்' என்ற இந்திப் படத்தில் மீண்டும் நடித்து இருந்தார். அதன் பிறகு இந்தியில் அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை.

நடிகை கவுரி கிஷன் '96' படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அந்தப் படத்தின் வெற்றியால் தமிழ், மலையாளப் படங்களில் இவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் மகள் சுஸ்மிதா கோனிடேலா தயாரிக்கும் படத்தில் கவுரி கிஷன், சந்தோஷ் சோபன் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இவர் விரைவில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாசுடன் நடிக்க இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் 'ராயன்' என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், ராஜ் கிரண் நடிப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்திற்குப் பிறகு 'ராயன்' படத்திற்கான படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.