மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் பூஜா

மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் பூஜா

3 mins read
bd3d7765-643c-49f7-855f-3d6aece7c0fd
-

தமி­ழில் 'முக­மூடி', 'பீஸ்ட்' போன்ற படங்­களில்

நடித்­த­வர் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கு,

இந்­தி­யில் அதி­க­மான படங்­களில் நடித்து

வரு­கி­றார். மேலும் இந்­தி­யில் சல்­மான்­கா­னு­டன் இணைந்து ஒரு படத்­தில் நடித்­த­போது படப்­பி­டிப்பு தளத்­தில் ஏற்­பட்ட விபத்து

கார­ண­மாக சில வாரங்­க­ளாக ஓய்வு எடுத்த பிறகு மீண்­டும் படப்­பி­டிப்­பு­களில் கலந்­து­கொள்­ளத் தொடங்­கி­யுள்­ளார்.

மிஸ்­கின் இயக்­கத்­தில் உரு­வான

'முக­மூடி' திரைப்­ப­டத்­தின் மூலம் திரைத்­

து­றை­யில் அறி­மு­க­மான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என இது­வரை 15 படங்­களில் நடித்­துள்­ளார்.

விஜய்­யு­டன் 'பீஸ்ட்' படத்­தில் நடித்­த­தன் மூலம் மீண்­டும் தமிழ்ப் படங்­களில் அடுத்­த­டுத்து நடிக்க வாய்ப்­புக் கிடைக்­கும் என்று எதிர்­பார்த்து பூஜா ஹெக்டே காத்­தி­ருந்த நிலை­யில், படத்­திற்கு நல்ல வர­வேற்பு கிடைக்­கா­த­தால் தமி­ழில் இவ­ருக்கு தொடர்ந்து வாய்ப்­பு­கள் இல்­லா­மல் போனது.

தமி­ழில் ராசி இல்­லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்­டும் தெலுங்கு பக்­கம் சென்­றார்.

இவர் தற்­பொ­ழுது விஜய் தேவ­ர­கொண்­டா­வு­டன் இணைந்து 'ஜன கன மன' என்ற படத்­தில் நடித்து வரு­கி­றார். அதி­ரடி சண்­டைக் காட்­சி­கள் நிறைந்த இந்­தப் படத்­தில், பூஜா­வுக்கு மிரட்­ட­லான சண்­டைக் காட்­சி­கள் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது. அந்த காட்­சிக்­காக வெளி­நாட்டு பயிற்­சி­யா­ள­ரி­டம் தீவிர பயிற்சி எடுத்து வரு­கி­றார்.

இதற்­கி­டை­யில், இவர் மகேஷ் பாபு­வின் 28வது பட­மான 'திரி­விக்­கி­ரம்' என்ற படத்­தில் நடிக்க ஒப்­பந்­தம் ஆனார். படத்­தில் நடித்­துக்­கொண்டு இருக்­கும்­போது காலில் அடி­பட்டு நரம்பு பாதிக்­கப்­பட்­டது. அத­னால் இவர் காலில் கட்டு போட்­டுக்­கொண்டு வீட்­டில் சிகிச்சை பெறும் படங்­களை வலைத்­த­ளத்­தில் பகிர்ந்­தார்.

அதைப் பார்த்த ரசி­கர்­கள் கவ­லை­யு­டன், 'விரைந்து நலம்­பெற வேண்­டும்,' என்று வலைத்­த­ளத்­தில் பதி­விட்­ட­னர்.

அத­னால் இவர் தற்­பொ­ழுது மற்­றொரு பதிவு ஒன்றை வலைத்­த­ளத்­தில் பதி­விட்டு இருக்­கி­றார். அதில், "விபத்­துக்கு பிறகு நான் நன்­றாக தேறி வரு­கி­றேன். தற்­பொ­ழுது மகேஷ் பாபு நடிக்­கும் அவ­ரது 28வது பட­மான 'திரி­விக்­கி­ரம்' என்ற படத்­தில் நடிக்­கத் தொடங்கி இருக்­கி­றேன்," என்று பதி­விட்டு இருந்­தார்.

இந்­நி­லை­யில், மகேஷ் பாபு­வின் தந்தை கிருஷ்ணா அண்­மை­யில் கால­மா­ன­தை­ய­டுத்து அந்­தப் படத்­தின் படப்­பி­டிப்பு நிறுத்தி வைக்­கப்பட்டது.

டிசம்­பர் மாதம் மீண்­டும் மகேஷ்­பாபு படப்­பி­டிப்­பில் கலந்­து­கொள்­ளும்­போது படப்­பி­டிப்பு தொடங்­கும் என்று கூறப்­ப­டு­கிறது. மகேஷ் பாபு­வு­டன் பூஜா ஹெக்டே

'மக­ரிஷி' என்ற படத்­தி­லும் நடித்­தி­ருந்­தார்.

பூஜா காலில் அடி­பட்டு, ஓய்­வாக இருந்த நேரத்­தில் தன்­னு­டைய வீட்டை கோடிக்­க­ணக்­கான பணத்­தைச் செலவு செய்து குட்டி சொர்க்க பூமி­யாக மாற்­றி­யுள்­ளார். அந்த வீட்­டைக் காணொளி எடுத்து இணை­யத்­தில் பகிர்ந்­துள்­ளார்.

அந்தக் காணொளியில், கத­வைத் திறந்து வெளியே இருப்­ப­வர்­களை பூஜா ஹெக்டே வர­வேற்­ப­து­போல் தொடங்­கு­கி­றைது.

வீட்­டிற்­குள் சென்­ற­தும் ஆறு இருக்­கை­கள் கொண்ட சாப்­பாட்டு மேஜை அழ­காக வர­வேற்­கிறது. மேலும், அறை­யின் சன்­னல் மெல்­லிய வெள்ளை நிற திரை­க­ளால் மூடப்­பட்­டி­ருக்­கிறது. அறை­யின் மறு­பு­றம் சமை­ய­லறை, பளிங்கு பூச்­சு­டன் ஒரு தீவு­போல பரந்து விரிந்து இருக்­கிறது.

பூஜா­வின் படுக்­கை­

ய­றை­யில் அவர் விரும்­பிய அனைத்து படங்­க­ளின் சுவ­ரொட்­டி­களும் தொங்­க­வி­டப்­பட்­டுள்­ளன. அலங்­கார விளக்­கு­கள் பிர­மிக்­க­வைக்­கும் உள் அலங்­கார வேலைப்­பா­டு­கள் என ஒவ்­வொன்­றும் பார்ப்­ப­வர் கண்­ணுக்கு விருந்­தாக இருக்­கின்­றன.

இந்த வீட்­டைப் பார்த்த ரசி­கர்­கள் ஏக்­கத்­து­டன் 'இது வீடா சொர்க்க பூமியா?' என மெய்­ம­றந்து ரசித்து வரு­கின்­ற­னர்.

பூஜா ஹெக்டே, 2010ஆம் ஆண்டு 'மிஸ் யூனி­வெர்ஸ் இந்­தியா' என்ற அழகு போட்­டி­யில் இரண்­டாம் இடத்­தைப் பிடித்து புகழ் பெற்­ற­வர். இந்­தப் புக­ழைத் தொடர்ந்து 'மாட­லிங்' துறை­யி­லி­ருந்து தமிழ் சினி­மா­வில் 'முக­மூடி' படத்­தில் அறி­மு­க­மானார். பின்­னர் தெலுங்கு, இந்தி மொழி திரைப்­ப­டங்­களில் பணி­யாற்றி பல ரசி­கர்­களை கவர்ந்து பிர­ப­ல­மா­கி­யுள்­ளார்.