கண்ணழகி நிபாஷினி

கண்ணழகி நிபாஷினி

1 mins read
44dd4c73-a123-4f5e-92f2-5a784e5d16ea
-
Google News Preferred Icon

'பிக் பாஸ் 6' நிகழ்ச்சி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரமும் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வீட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.

கடந்த வாரம் வாக்குகள் குறைவாகப் பெற்றதால் நன்றாக விளையாடி வந்த நிவாஷினி வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், 42 நாட்கள் அந்த வீட்டிற்குள் இருந்த நிபாஷினிக்கு சுமார் ஐந்து லட்ச ரூபாய் சம்பளமாக கிடைத்திருக்கிறது என்று தகவல்கள் கசிந்துள்ளன.

சிங்கப்பூரைச் சேர்ந்த நிவாஷினி தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார். இவர் இணையத் தொடர், குறும்படம் ஆகியவற்றில் நடித்ததோடு, மாடல் அழகியாகவும் இணையத்தொடர் ஒன்றின் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார் என்று கூறப்படுகிறது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படங்களில் நடிக்க வாய்ப்புகள் அவரைத் தேடிவரும் என்று கூறப்படுகிறது.