படப்பிடிப்புக்கு வர மறுத்த வரலாற்று நாயகர்கள்

படப்பிடிப்புக்கு வர மறுத்த வரலாற்று நாயகர்கள்

2 mins read
a4536bc4-11a8-4e90-9469-08d62aa1e268
-

'பொன்­னி­யின் செல்­வன் 2' படத்­திற்கு மேலும் சில காட்­சி­களை எடுக்­க­லாம் என்று முடி­வெ­டுத்த இயக்­கு­நர் மணி­ரத்­னம் படத்­தில் நடித்­தி­ருந்­த­வர்­க­ளி­டம் கேட்­ட­போது மூன்று முக்­கிய நடி­கர்­கள் சில கார­ணங்­க­ளைச் சொல்லி படப்­

பி­டிப்­பில் கலந்­து­கொள்ள முடி­யாது என்று கூறி­யது பல­ரை­யும் ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்தி இருக்­கிறது.

மணி­ரத்­னம் இயக்­கத்­தில்,

விக்­ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்­வர்யா ராய், ஐஸ்­வர்யா லட்­சுமி மற்­றும் பல­ரது நடிப்­பில் வெளி­யான வர­லாற்­றுப் படம் 'பொன்­னி­யின் செல்­வன்'.

இப்­ப­டம் வெளியாகி ரூ.500 கோடிக்­கும் அதி­க­மான வசூ­லைக் குவித்­தது. இப்­ப­டத்­தில் நடித்­த­வர்­

க­ளுக்கு நல்ல பெய­ரை­யும் பெற்­றுத் தந்­தது. சிறிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­த­வர்­க­ளுக்­குக்­கூட ரசி­கர்­க­ளின் பாராட்­டுகள் கிடைத்­தன.

இரண்டு பாகங்­க­ளாக வெளி­யாக உள்ள இப்­ப­டத்­தின் இரண்­டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடு­மு­றைக்கு வெளி­யா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

முதல் பாகத்­தின் படப்­பி­டிப்பு நடத்­தி­ய­போதே இரண்­டாம் பாகத்­தின் படப்­பி­டிப்­பை­யும் சேர்த்து முடித்­து­விட்­டார்­கள்.

முதல் பாகத்­திற்கு நல்ல வர­வேற்பு கிடைத்­த­தால் இரண்­டாம் பாகத்­தில் மேலும் சில புதிய காட்சி­ க­ளை இணைக்க முடிவெடுத்தார் இயக்குநர். அதனால் அது சம்பந்தப் பட்ட காட்சிகளைப் பட­மாக்க மணி­ரத்­னம், படத்தில் நடித்த நடிகர் களை அணுகினார்.

படத்­தின் மையக் கதா­பாத்­தி­ர­மான வந்­தி­யத் தேவன் கதா­பாத்­தி­ரத்­திற்­குக் கூடு­த­லா­கக் காட்­சி­

க­ளைச் சேர்க்க முடிவு செய்து கார்த்­தியை மீண்­டும் படப்­பி­டிப்­புக்கு அழைத்­தார் இயக்­கு­நர் மணி­ரத்­னம். ஆனால், அடுத்­த­டுத்து புதிய படங்­களில் நடிக்க ஒத்­துக்கொண்­ட­தாலும் வந்­தி­யத்தேவன் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க மீண்­டும் நீள­மான முடியை வளர்க்க முடி­யாது என்று சொல்லியும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என கார்த்தி மறுத்­து­விட்­ட­தாக கூறப்படுகிறது.

அவரையடுத்து விக்­ரம், ஜெயம் ரவி கதா­பாத்­தி­ரங்­களை கொஞ்­சம் நீட்­டித்து பட­மாக்­க­லாம் என அவர்­க­ளி­டம் பேசியபோது அவர்­களும் கார்த்தி சொன்ன அதே கார­ணத்தைச் சொல்லி ஒதுங்­கி­யி­ருக்­கி­றார்­கள்.

அத­னால் கதா­நா­ய­கர்­களை விட்­டு­விட்டு ஐஸ்­வர்யா ராய் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­க­ளைப் பட­மாக்க தற்­போது முடிவு செய்து அவ­ரி­டம் பேசி­யி­ருக்­கி­றார்.

ஐஸ்­வர்யா ராயும் நடிக்க ஒத்­துக்­கொண்டு இருக்­கி­றார். அதற்­காக படக்­கு­ழு­வி­னர் விரை­வில் மும்பை சென்று அங்­கேயே காட்சி­

க­ளைப் பட­மாக்­கப் போகி­றார்­க­ளாம்.

எனவே இரண்­டாம் பாகத்­தில் ஐஸ்­வர்­யா­ ராயின் நந்­தினி கதா­பாத்­தி­ரத்­திற்­குக் கூடு­தல் காட்­சி­கள் வர­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

'பொன்னியின் செல்வன்' படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம், வந்தியத்தேவனாக நடித்த கார்த்தி.