வித்தியாசமான வேடத்தில் துல்கர் சல்மான்

வித்தியாசமான வேடத்தில் துல்கர் சல்மான்

1 mins read
92128edb-e0f1-4c7b-9a6c-b8778c6b0298
-

சில ஆண்­டு­க­ளா­கவே துல்­கர் சல்­மான் வித்­தி­யா­ச­மான கதை­க­ளுக்­கும் கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­கும் முக்­கி­யத்­து­வம் கொடுத்து நடித்து வரு­கி­றார். அத­னால் தென்­னிந்­திய மொழி­க­ளைத் தாண்டி பாலி­வுட்­டி­லும் அவ­ருக்கு வர­வேற்பு இருக்­கிறது.

இந்­தி­யில் தற்­பொ­ழுது அவர் நடித்­துள்ள 'சுப்' என்­கிற திரைப்­ப­டம் இன்று நேர­டி­யாக 'ஓடிடி' தளத்­தில் வெளி­யா­கிறது.

ஒரு கலை­ஞ­னின் பழி­வாங்­கல் என்­கிற ஒரு வரி கதை­யில் இந்­தப் படம் உரு­வா­கி­யுள்­ளது. அதற்­கேற்­ற­படி இந்­தப் படத்­தில் முதன்­மு­றை­யாக தொடர்ச்­சி­யாக கொலை செய்­யும் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார் துல்­கர் சல்­மான்.

இது­வரை தான் நடித்த படங்­க­ளி­லேயே தனக்கு இந்­தப் படம் ஒரு பரி­சோ­தனை முயற்­சி­யான படம் என்­றும் இது வழக்­க­மான ஒரு துப்­ப­றி­யும் பட­மாக இருக்­காது. ரசி­கர்­களை இருக்கை நுனி­யில் அமர வைக்­கிற, இத­யத்தை நிறுத்தி, துடிக்க வைக்­கும் வித­மான ஒரு மர்­ம­மான பட­மாக இருக்­கும் என்­றும் கூறி­யுள்­ளார் துல்­கர் சல்­மான்.