திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
5ab4c8b4-f53b-457b-ae12-2e131887f17e
-
multi-img1 of 3
Google News Preferred Icon

 வரலட்சுமிக்கு தொடர்ந்து பல வாய்ப்புகள் தேடி வருகின்றன. அதனால் தெலுங்கிலும் கன்னடத் திலும் தான் நடித்து வருவதாகவும் தமிழில்

நல்ல கதாபாத்திரங்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வரலட்சுமி நடிப்பில் அடுத்து வெளி யாகும் படம் 'கொன்றால் பாவம்'. இதில் ஈஸ்வரி ராய், சார்லி, மனோபாலா, ஜெயகுமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தயாள் பத்மநாபன் இயக்குகிறார். இது கன்னட நாடகம் ஒன்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாம்.

 'யசோதா' படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டச்சிக்கல் காரணமாக அப்படம் வெளியாகவில்லை. 'யசோதா' படத்தில் ஒரு மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டு சில வசனங்கள் இடம்பெற்றுள் ளன. ஆனால் ஹைதரா பாத்தில் அதே பெயரில் உண்மையாகவே ஒரு மருத்துவமனை இயங்கி வருகிறதாம். கதைப்படி, ஒரு குறிப்பிட்ட மருத்துவமனை வாடகைத் தாய் விவகாரத்தில் மோசடி செய்வதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் மருத்துவமனையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக அந்தத் தனியார் மருத்துவமனை வழக்கு தொடுத்துள்ளது. இதன் காரணமாக அப்படத்தின் ஓடிடி வெளியீடு தள்ளிப்போயுள்ளது.

 உண்மைக் கதையில் நடிக்க வேண்டும் என்றால் உற்சாகமாகிவிடுகிறார் நடிகை பிரியாமணி. இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் 'சாருலதா'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழிலும் மலையாளத்திலும் உருவாகி வரும் 'டிஆர் 56' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் முதன்முறையாக சிபிஐ அமைப்பின் புலனாய்வு அதிகாரி வேடத்தில் தோன்றுகிறார். மீண்டும் தமிழ்ப் படத்தில் தோன்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்பவர், இந்தப் படத்துக்கான கதையை இயக்குநர் தம்மிடம் விவரித்தபோது, இப்படி எல்லாம்கூட நடக்குமா என மிரண்டு போனதாகச் சொல்கிறார்.

 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சத்யராஜ் 12 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டாராம். இதுகுறித்து பரிசீலித்து வருகிறாராம் இயக்குநர் சங்கர்.