நாயகர்களின் புது முடிவு

நாயகர்களின் புது முடிவு

3 mins read
bc125e7f-9729-4712-8990-85662ea6e974
-

தமிழ்த் திரை­யு­ல­கின் முன்­னணி நாய­கர்­கள் பல­ரும் ஒரு படத்­தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்­துக்­கான வேலை­க­ளைத் தொடங்கு­கின்­ற­னர்.

எனவே, அபி­மான நாய­கர்­கள் தற்­போது நடித்து வரும் படம் குறித்த அண்­மைத் தக­வல்­க­ளைத் தெரிந்துகொள்­வ­தில் ரசி­கர்­கள் மத்­தி­யில் ஆர்­வம் அதி­க­ரித்து வரு­கிறது.

ரஜி­னி­காந்த் 'ஜெயி­லர்' படத்­தில் நடித்து வரு­கி­றார். இதன் அறுபது விழுக்­காடு படப்­பி­டிப்பு முடிந்­து­விட்­டது. சென்னை­யில் சிறைச்­சாலை போன்ற அரங்கு அமைத்து படப்­பி­டிப்பை நடத்தி வரு­கி­றார்­கள்.

மிக விரை­வில் இறு­திக்­காட்­சி­யைப் பட­மாக்க ஹைத­ரா­பாத் செல்லப் போகி­றார்­களாம். இந்­தப் படத்தை முழு­மை­யாக முடித்த பிறகே தன் மகள் ஐஸ்­வர்யா இயக்­கும் படத்­தில் கௌரவ தோற்­றத்­தில் நடிக்க உள்­ளார் ரஜினி.

கமல்­ஹா­சன் 'விக்­ரம்' படத்­துக்குப் பிறகு ஏற்­கெ­னவே பாதி­யில் நின்­று­போன 'இந்­தி­யன் 2' படத்­தில் நடித்து வரு­கி­றார்.

மணி­ரத்­னம் இயக்­கத்­தி­லும் அடுத்து நடிக்க உள்­ளார். தனது படத்­தில் ரஜினி, கமல் இரு­வ­ரை­யும் இணைந்து நடிக்க வைக்க மணி­ரத்­னம் முயற்சி மேற்­கொண்­டா­ராம்.

ஆனால் எடுத்த எடுப்­பி­லேயே ரஜினி இதற்கு மறுத்­து­விட்­ட­தா­கத் தக­வல். உத­ய­நிதி நடிக்­கும் பட­மொன்றை தயாரிக்­க­வும் உள்­ளார் கமல். வம்சி பைடி­பள்ளி இயக்­கத்­தில் விஜய் நடிக்­கும் 'வாரிசு' பட வேலை­கள் இறு­திக் கட்­டத்­தில் உள்­ளன. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி­களில் வெளி­யாக இருக்­கிறது இப்­படம்.

இதை­ய­டுத்து லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கும் படத்­தில் நடிக்க உள்­ளார் விஜய். இவர்­கள் கூட்­ட­ணி­யில் ஏற்­க­னவே 'மாஸ்­டர்' படம் வந்­துள்­ளது.

அஜித்­கு­மார் அடுத்து ஹெச்.வினோத் இயக்­கும் 'துணிவு' படத்தில் நடித்­துக்கொண்­டி­ருக்­கி­றார். இதன் படப்­பி­டிப்பு முடிந்து தொழில்நுட்பப் பணி­கள் நடக்­கின்­றன. பொங்­கலுக்கு திரைக்கு கொண்டு வரு­கிறார்­கள். அடுத்து விக்­னேஷ்­சி­வன் இயக்­கத்­தில் நடிக்­கி­றார் அஜித்.

பா.ரஞ்­சித் இயக்­கும் 'தங்­க­லான்' படத்­தில் விக்­ரம் நடிக்­கி­றார். இது கோலார் தங்க வயல் பகு­தியை பின்­பு­ல­மாக வைத்து உரு­வாகி­ உள்ள கதை­யாம்.

சூர்யா கடந்த சில மாதங்­க­ளாக இயக்­கு­நர் பாலா இயக்­கும் 'வணங்­கான்' படத்­தில் நடித்து வந்­தார். இப்­போது சிவா இயக்­கும் படத்­தி­லும் நடிக்­கி­றார். ‌'வாடி­வா­சல்' பட­மும் கைவ­சம் உள்­ளது. எல்லாம் வரி­சை­யாக வெளி­யா­கும்.

கார்த்தி 'பொன்­னி­யின் செல்­வன்', 'சர்­தார்' படங்­க­ளுக்குப் பிறகு ராஜு முரு­கன் இயக்­கும் படத்­தில் நடித்து வரு­கி­றார். இது கார்த்­தி­யின் 25வது படம். 'ஜப்­பான்' என்று தலைப்பு வைத்­துள்­ள­னர். அடுத்து 'சர்­தார்' படத்தின் இரண்­டாம் பாகத்­தி­லும் நடிக்­கி­றா­ராம்.

வினோத் குமார் இயக்­கும் 'லத்தி' படத்­தில் நடித்து முடித்­து­விட்டு, ஆதிக்­ர­விச்­சந்­தி­ரன் இயக்­கத்­தி­லும் நடிக்­கி­றார் விஷால். ஜெயம் ரவி அடுத்து ஆண்­டனி பாக்­ய­ராஜ் இயக்­கும் 'சைரன்' படத்­தில் நடித்து வரு­கி­றார். தனுஷ், தமிழ், தெலுங்­கில் தயா­ரா­கும் 'வாத்தி' படத்தை முடித்துவிட்டு இப்­போது அருண் மாதேஸ்­வ­ரன் இயக்­கும் 'கேப்­டன் மில்­லர்' படத்­தில் நடித்து வரு­கி­றார்.

சிவ­கார்த்­தி­கே­யன் 'மண்­டேலா' படத்தை இயக்கி பிர­ப­ல­மான மடோன் அஸ்­வின் இயக்­கத்­தில் 'மாவீ­ரன்' படத்­தில் நடித்­துக் கொண்டு இருக்­கி­றார். இந்­தப் படங்­க­ளின் படப்­பி­டிப்­பு­கள் பல்­வேறு இடங்­களில் விறு­வி­றுப்­பாக நடந்து வரு­கின்­றன.

இதற்­கி­டையே, தயா­ரிப்­புச் செல­வைக் குறைப்­ப­தில் தயா­ரிப்­பா­ளர்­கள், இயக்­கு­நர்­க­ளுக்கு முன்­னணி நடி­கர்கள் அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும் என மீண்­டும் வலியுறுத்­தப்பட்டுள்ளது.

ஒரு படத்­துக்­காக படப்­பி­டிப்பு நடக்­கும் நாள்­கள் சில கதா­நா­ய­கர்­க­ளின் ஒத்­து­ழைப்­பின்­மை­யால் அதி­க­ரிக்­கிறது என்­றும் இதன் கார­ண­மாக பொருள் செலவு ஏற்­படு­கிறது என்­றும் தயா­ரிப்­பா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே 'பொன்­னி­யின் செல்­வன்' இரண்­டாம் பாகத்­தில் மேலும் சில காட்­சி­களை இணைக்­கத் திட்­ட­மிட்டு, அதில் நடித்த கலை ஞர்­க­ளைத் தொடர்பு கொண்டு பேசி­யுள்­ளார் மணி­ரத்­னம்.

தனது மகன் துருவ் அறி­மு­க­மான படம் தோல்வி அடைந்­த­தால் வருத்­தத்­தில் இருந்­தார் விக்­ரம். இந்­நி­லை­யில், முன்பு பல வெற்­றிப் படங்­க­ளைக் கொடுத்­துள்ள இயக்­கு­ந­ரைச் சந்­தித்­தா­ராம். அப்­போது அவர் சொன்ன கதை விக்­ர­முக்கு மிக­வும் பிடித்­துப்­போ­னது. எனி­னும் அப்­போதே அந்­தக் கதையை பட­மாக்­கும் சூழல் அமை­ய­வில்லை. இந்நிலையில், அண்மை யில் அந்த இயக்குநரை மீண்டும் சந்தித்தபோது, அதே கதை குறித்து மீண்டும் விவாதித்துள்ளனர். இதையடுத்து அந்தக் கதையில் துருவ் நாயகனாக நடிக்க, விக்ரமே தயாரிக்க உள்ளார்.

, :

  