ஆரவ்: தொடர்ந்து வில்லனாக நடிப்பேன்

'பிக்­பாஸ்' நிகழ்ச்­சி­யில் வெற்றிபெற்ற பிறகு சில படங்­களில் நாய­க­னாக நடித்த ஆரவ், தற்­போது மகிழ் திரு­மே­னி­யின் இயக்­கத்­தில் உரு­வான 'கல­கத் தலை­வன்' படத்­தில் வில்­ல­னாக நடித்து மிரட்டி உள்­ளார்.

நாய­கன் உத­ய­நிதி ஸ்டா­லி­னுக்கு இணை­யாக தமக்­கும் உரிய முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­ட­தா­கச் சொல்­கி­றார் ஆரவ்.

'மார்க்­கெட் ராஜா எம்­பி­பி­எஸ்' உள்ளிட்ட படங்­களில் நாய­க­னாக நடித்­து­விட்டு, திடீ­ரென வில்­ல­னாக நடிக்க சம்­ம­தித்­தது எப்­படி என்று கேட்­டால், ஆரவ்­வின் முதல் பதில், முகம் கொள்­ளாத புன்­ன­கை­யா­கத்­தான் இருக்­கிறது.

"நடி­க­னாக வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் சினிமா துறைக்கு வந்­தேன். அது வில்­லனாக இருந்­தா­லும் சரி, குணச்­சித்­திர பாத்­தி­ர­மாக இருந்­தா­லும் சரி, வாய்ப்பு கிடைத்­தால் போதும் என்பதே எனது எண்­ண­மாக இருந்­தது.

"அதா­வது, வாய்ப்பு கிடைத்­தால் அதுவே போதும் என்­று­தான் நினைத்­தி­ருந்­தேன். அந்த ஆசை நிறை­வே­றி­ய­தில் மகிழ்ச்சி. அந்த ஆசைக்கு மேலதிகமாகக் கிடைத்­தது எல்­லாம் நான் சற்­றும் எதிர்­பா­ரா­தவை. நாய­க­னாக நடிப்­பேன் என்று நினைக்­க­வில்லை.

"எனி­னும் அதற்­கான வாய்ப்­பு­கள் அமைந்­த­போது, அதற்­கேற்ப என்­னைத் தயார்­படுத்­திக்கொண்­டேன்.

"உண்­மை­யைச் சொல்­வ­தா­னால், நாய­க­னாக நடித்­துக் கொண்­டி­ருந்­த­போதே வில்­ல­னாக நடிக்க முடி­யுமா என்று சிலர் கேட்­ட­னர். எனக்­கும் அவ்­வாறு நடிப்­ப­தில் விருப்­பம் இருந்­தது. எனி­னும் சரி­யான இயக்­கு­நர் படத்தில், சரி­யான கதை­யில் நடிக்கவேண்­டும் எனக் காத்­தி­ருந்­தேன்," என்­கி­றார் ஆரவ்.

திடீ­ரென ஒரு­நாள் உத­ய­நி­தி­யின் ரெட் ஜெயன்ட் நிறு­வ­னத்­தில் இருந்து தொடர்­பு­கொண்டு எதிர்­மறை கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க இய­லுமா எனக் கேட்­ட­ன­ராம். மகிழ் திரு­மேனி, உத­ய­நிதி கூட்­டணி என்­றதும் எந்­த­வித தயக்­க­மும் இன்றி ஒப்­புக் கொண்­டா­ராம்.

"இந்­தப் படத்­தில் தனது கதா­பாத்­தி­ரத்­துக்கு எதி­ராக வில்­ல­னும் சம­மாக இருந்­தால்­தான் கதைக்­குப் பல­மாக இருக்­கும் என உதய் அண்­ண­னும் நினைத்­தார். மகிழ் திரு­மே­னியையே நடிக்க வைக்­க­லாம் என்­று­கூட யோசித்­தாராம். பிறகு என்னைத் தேர்வு செய்­த­னர்.

"இப்­போது படத்­துக்கு கிடைத்­துள்ள வர­வேற்­பும் எனக்கு கிடைக்­கும் பாராட்­டு­களும் உற்­சா­கம் அளிக்­கின்­றன. இதற்­காக இயக்­கு­ந­ருக்­கும் உதய் அண்­ண­னின் பெருந்­தன்­மைக்­கும் நன்றி. தொடர்ந்து வில்ல னாக நடிப்பேன்," என்கிறார் ஆரவ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!