ராஷ்மிகாவுக்கு தடை விதிக்க முடிவு

ராஷ்மிகாவுக்கு தடை விதிக்க முடிவு

2 mins read
5db0358a-974d-4bd3-a176-0a9a2ce88b1f
-

கடந்த 2016ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்ற கன்­ன­டப் படம் மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­னார் ராஷ்­மிகா மந்­தனா. அதன் பின்­னர் அவர் நடித்த பல படங்­கள் வசூல் ரீதி­யில் வெற்றி பெற்­றன.

இதை­ய­டுத்து, முன்­னணி நாய­கி­யாக வள­ரத் தொடங்­கிய வேளை­யில் அவ­ருக்­கும் 'கிரிக் பார்ட்டி' படத்­தில் இணைந்து நடித்த ரக்­‌ஷித் ரெட்­டிக்­கும் இடையே காதல் மலர்ந்­தது. அது திரு­ம­ணத்­தில் முடி­யும் முன்பு மனம் மாறி­விட்­டார் ராஷ்­மிகா.

இதன்பிறகு தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி, ரசி­கர்­க­ளின் தூக்­கத்­தைக் கெடுத்து வரு­கி­றார். இந்­நி­லை­யில், அண்­மை­யில் அளித்த ஒரு பேட்­டி­யில், தாம் அறி­மு­க­மான கன்­ன­டப் படம் குறித்து அதி­கம் பேசு­வ­தைத் தவிர்த்­தார் ராஷ்­மிகா. மேலும், ரக்­‌ஷித் ரெட்­டி­யின் நிறு­வ­னப் பெய­ரை­யும் பேட்­டி­யில் எந்த இடத்­தி­லும் அவர் குறிப்­பி­ட­வில்லை.

கூடு­மா­ன­வரை கன்­ன­டம் தவிர்த்து பிற­மொழி படங்­கள் குறித்­தும் கதா­நா­ய­கர்­கள் பற்­றி­யும்­தான் அதி­கம் பேசி­னார் ராஷ்­மிகா. இது கன்­ன­டத் திரை­யு­ல­கத்­தி­னர் மத்­தி­யில் கோபத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

தயா­ரிப்­பா­ளர்­க­ளை­யும் இயக்­கு­நர்­க­ளை­யும் இவ்­வாறு புறக்­க­ணிப்­பது மிக மோச­மான போக்கு என்று கன்­னட திரை­யு­ல­கத்­தைச் சேர்ந்த சிலர் தெரி­வித்­துள்­ள­னர். இதை­ய­டுத்து, ராஷ்­மி­கா­வுக்கு தடை விதிப்­பது என்ற யோச­னையை பரி­சீ­லித்து வரு­வ­தா­கத் தக­வல்.

அடுத்து, 'வாரிசு', 'புஷ்பா-2' ஆகிய இரு படங்­கள் ராஷ்­மிகா நடிப்­பில் வெளி­யாக உள்­ளன. அந்­தச் சம­யத்­தில் தடை குறித்த அறி­விப்பை வெளி­யிடு­வ­தற்கு வாய்ப்பு உள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து, மன்­னிப்பு கோரி இந்­தப் பிரச்­சி­னைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கு­மாறு ராஷ்­மி­கா­வுக்கு நெருக்­க­மா­ன­வர்­கள் அவ­ருக்கு அறி­வுரை வழங்கி உள்­ள­னர்.

ஆனால், அவரோ இந்த ஆலோசனையை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

"நான் யாரையும் ஒதுக்கி வைக்கும் நோக்கத்தோடு பேட்டி அளிக்கவில்லை. கேட்ட கேள்விகளுக்குத்தான் பதில் அளித்துள்ளேனே தவிர, வேறு எதையும் கூடுதலாகவோ குறைவாகவோ பேசவில்லை," என்கிறாராம் ராஷ்மிகா.