'ஜல்லிக்கட்டு தமிழர்களுக்கு மிக அவசியம்'

'ஜல்லிக்கட்டு தமிழர்களுக்கு மிக அவசியம்'

2 mins read
4d1a65f9-4adf-4457-8c5e-fb2df6cba486
-

ஜல்­லிக்­கட்டு என்­பது தமி­ழர்­க­ளின் கலா­சா­ரங்­க­ளில் முக்­கி­ய­மா­னது, முதன்­மை­யா­னது என்­கி­றார் இயக்­கு­ந­ரும் நடி­க­ரு­மான சசி­கு­மார்.

எனவே ஜல்­லிக்­கட்டு கலா­சாரம் என்­பது தமி­ழர்­கள் மத்­தி­யில் எப்­போ­துமே இருக்கவேண்­டும் என்­றும் அது மிக­வும் அவ­சி­யம் என்­றும் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

ஹேமந்த் இயக்­கத்­தில் சசி­குமார், பார்­வதி அருண் நடித்­துள்ள 'காரி' படம் நேற்று முன்­தி­னம் வெளி­யா­னது. இந்­தப் படத்­தின் முதல் ­காட்­சியை மது­ரை­யில் ஜல்லிக்­கட்டு வீரர்­க­ளு­டன் பார்க்கப் போவ­தாக நாய­கன் சசி­கு­மார் கூறி­யி­ருந்­தார்.

அதன்­படி, மது­ரை­யில் உள்ள திரை­ய­ரங்­கில் அவர் ஜல்­லிக்­கட்டு வீரர்­க­ளு­டன் படம் பார்த்­தார். முன்­ன­தாக, சில வீரர்­கள் ஜல்­லிக்­கட்டு காளை­க­ளை­யும் கொண்டு வந்­தி­ருந்­த­னர். அவற்றை சசி­கு­மார் வழி­பட்டு பின் படம் பார்த்­தார்.

அதன் பிறகு செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய அவர், ஜல்­லிக்­கட்டு வீரர்­கள்­தான் உண்­மை­யான கதா­நா­ய­கர்­கள் என்­றார்.

"வீரர்­க­ளு­டன் படம் பார்த்­த­தும் ரசி­கர்­க­ளின் வர­வேற்­பும் உற்­சா­கம் அளிக்­கிறது. இது ஜல்­லிக்­கட்­டு­டன் தொடர்­பு­டைய படம்­தான். இது­போன்ற படத்­தில் நடிக்க வேண்­டும் என்ற ஆசை நீண்ட நாள்­க­ளாக இருந்து வந்­தது.

"சில கார­ணங்­க­ளால் முன்பு இப்­படி நடிக்க முடி­ய­வில்லை. இயக்கு­நர் ஹேமந்த் அரு­மை­யான படத்தை தந்­துள்­ளார். நான் எதிர்­பார்த்­த­தை­விட படம் சிறப்­பாக வந்­துள்­ளது," என்­றார் சசி­கு­மார்.

இந்­தப் படத்­துக்­காக ராமநாதபுரம் மாவட்­டத்­தில் உண்­மை­யா­கவே ஜல்­லிக்­கட்டு போட்­டிக்கு ஏற்­பாடு செய்­த­ன­ராம். அத­னால்­தான் அனைத்து காட்­சி­களும் இயல்­பாக அமைந்­துள்­ளது என்­கி­றார்.

"பொங்­கல் கொண்­டாட்­டம் நெருங்கி வரும் நிலை­யில் ஜல்லிக்­கட்டு வீரர்­க­ளுக்கு இந்த படம் உற்­சா­கத்­தை­யும் ஊக்­கத்­தை­யும் அளிக்­கும்.

"ஜல்­லிக்­கட்டு தொடர்­பாக நீதி­மன்­றத்­தில் உள்ள வழக்­கு­களை எல்­லாம் நாம் கடந்து வரு­வோம். அனைத்­தை­யும் தாண்டி ஜல்­லிக்­கட்­டில் வெற்றி பெறு­வோம்,

"எனக்கு மட்­டு­மல்ல, ஜல்­லிக்­கட்டை உயி­ராக நேசிக்­கும் எல்­லா­ருக்­கும் சேர்த்­து­தான் இந்­தப் படத்தை உரு­வாக்கி உள்­ளோம்," என்­றார் சசி­கு­மார்.

தம்­மால் கிரா­மத்து கதை­க­ளைப் புறக்­க­ணிக்க இய­லாது என்று குறிப்­பிட்ட அவர், பிற கதைக்­க­ளங்­களி­லும் தொடர்ந்து நடிக்­கப் போவ­தாகத் தெரி­வித்­தார்.

"ஜல்­லிக்­கட்டு தமி­ழர்­க­ளின் கலா­சா­ரம். அது மிக அவசியமானது. அதை யாரா­லும் ஒன்­றும் செய்ய முடி­யாது. மாடு­களை தெய்­வ­மாகக் கொண்­டா­டு­கி­றார்­கள். இதை யாரும் தப்­பாகச் சொல்­லா­தீர்­கள்.

"இந்தப் படத்­தி­லும் அந்த விவ­ரங்­க­ளைப் பதிவு செய்­துள்­ளோம். ஜல்­லிக்­கட்­டின் அவ­சி­யம் குறித்து விரி­வா­கப் பேசி உள்­ளோம். அடுத்த மார்ச் மாதம் முதல் மீண்­டும் திரைப்­ப­டங்­களை இயக்க விரும்பு­கி­றேன்," என்­றார் சசி­கு­மார்.

'காரி' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி.