திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
a8728c1f-5b26-4c23-b028-a08a90987cc4
-
multi-img1 of 3

 திரையுலகில் வாரிசு நடிகைகள் மீது வெறுப்பு காட்டுவதாகப் புலம்புகிறார் காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர் வாரிசு நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார். அவர்தான் 'தடக்' படம் மூலம் ஜான்வியையும் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். இதுவே தன்னையும் வாரிசு நடிகை என விமர்சிக்க காரணமாகிவிட்டது என்கிறார் ஜான்வி. "என்னைக் கேலி செய்வதற்கு இதுதான் காரணமாக இருக்க வேண்டும். தொடக்கத்தில் என் மீது வாரிசு நடிகை என்று வைக்கப்படும் விமர்சனங்களால் நான் நெருக்கடிக்கு ஆளாகி கவலை அடைந்தேன். ஆனாலும் கரண் ஜோகரின் பட நிறுவனம் பல வித்தியாசமான, தரமான படங்களை எடுத்து வெளியிடு கிறது. அவரது நிறுவனத்தின் படத்தில் நடித்ததை நான் பெரிய வாய்ப்பாக நினைக்கிறேன்," என்கிறார் ஜான்வி கபூர்.

 'வாகை சூட வா' படத்துக்குப் பிறகு அதன் நாயகி இனியா வுக்கு சொல்லிக்கொள்ளும்படி யான வாய்ப்புகள் அமைய வில்லை. இந்நிலையில் அவர் நாயகியாக நடித்துள்ள

'காஃபி' என்ற படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. சில ஊழல்களையும் மனித கடத்தலையும் கண்டுபிடிக்கும் இனியாவின் சகோதரர் கடத்தப்படுகிறார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்க கடும் போராட்டங்களை எதிர்கொள் கிறார் இனியா. "இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களை யும் கவரும்," என்கிறார் இனியா.

 'சிறுத்தை' சிவா இயக்கும் 'சூர்யா 42' படத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை சொல்லப்பட்டுள்ளது. இதில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெரு மனத்தார் என ஐந்து பாத்திரங் களில் நடிக்கிறாராம் சூர்யா.

அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். இந்நிலையில் முழு நீள கற்பனைக் கதையைத்தான் சிவா படமாக உருவாக்கி உள்ளார் என்று இப்படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப் கூறியுள்ளார்.