‘இந்தச் சீருடை கம்பீரம் தரும்’

'டிஎஸ்பி' படத்­துக்­காக மீண்­டும் காவல்­துறை சீரு­டையை அணிந்­துள்­ளார் விஜய் சேது­பதி.

இந்­தச் சீரு­டையை அணிந்­தால் உட­லில் தனக்கு ஓர் மிடுக்கு வந்­து­வி­டு­கிறது என்­றும் வழக்­கத்­தை­விட புதிய சக்தி உட­லில் பர­வி­விட்ட உணர்வு ஏற்­ப­டு­கிறது என்­றும் சொல்­கி­றார்.

"எந்­தப் பட­மாக இருந்­தா­லும் எனக்­கான கதா­பாத்­தி­ரத்­துக்­காக அதி­கம் உழைப்­ப­து­தான் என் பொறுப்பு. மேலும், அந்­தப் பாத்­தி­ரங்­களில் மனம் ஒன்­றிப்­போய், ரசித்து நடிக்­கி­றேன்.

"நமது படங்­க­ளைப் பார்க்க மக்­கள் தங்­கள் பணத்­தைச் செல­வி­டு­கி­றார்­கள். எனவே நமது படைப்பு தர­மா­ன­தாக இருக்க வேண்­டும் என்ற கவலை எனக்­கும் உண்டு. என் மன­துக்­குப் பிடித்­த­மா­ன­வற்றை செய்­கி­றேன் என்­றா­லும், அதன் மூலம் ரசி­கர்­க­ளு­டன் இணை­வ­து­தான் முக்­கி­யம்," என்­கி­றார் சேது­பதி.

சிறி­தும் பெரி­து­மாக இது­வரை ஐம்­பது படங்­களில் நடித்து முடித்து­விட்­டா­ராம். கணக்கு ஏதும் வைத்­துக் கொள்­ள­வில்லை என்­கி­றார்.

"அன்று முதல் இன்று வரை வெகு­ஜன சினி­மா­வில்­தான் இருக்கி­றேன். அதற்­கென்று சில அள­வு­கோல்­கள் உள்­ளன. அவற்­றுக்கு உள்­ளே­தான் நானும் உள்­ளேன்.

"இந்த வேலை­யைப் பணத்­துக்­காக மட்­டுமே செய்­யவில்லை. யாருக்கோ கட்­டுப்­பட்­டும் செய்­ய­வில்லை. வேறு எந்த வேலை­யும் இல்லை என்­ப­தற்­கா­க­வும் செய்­ய­வில்லை. இது உண்­மை­யி­லேயே அருமை­யான வேலை என நினைப்­ப­தால்­தான் செய்­கி­றேன். படிப்­ப­டி­யா­கத்­தான் இந்த நிலைக்கு வந்­தி­ருக்­கி­றேன். நான் என்னை திறமை வாய்ந்த நடி­க­னாக நினைத்­துக்கொள்­வதில்லை.

"எனது படங்­கள் பல வணிக சினிமா அள­வு­கோல்­க­ளி­ல் இருந்து கொஞ்­சம்­தான் மாறி­ இருக்­கும். நான் அதி­லேயே எதை­யா­வது செய்­து­விட முடி­யுமா என முயற்சி செய்­கி­றேன்," என்கிறார் சேது­பதி.

'டிஎஸ்பி' படம் குறித்த எதிர்­பார்ப்பு ரசி­கர்­கள் மத்­தி­யில் அதி­க­ரித்து வரு­வதை தானும் அறிந்­துள்­ள­தா­கக் குறிப்­பி­டு­பவர், ஏற்­கெ­னவே காவல்­துறை அதி­கா­ரி­யாக நடித்­தி­ருப்­பது இப்­போது கைகொ­டுப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"இதற்கு முன்பு 'சேது­பதி' படத்­தில் கதா­நா­ய­கன் காவல்­துறை அதி­கா­ரி­யாக எந்த தனிப்­பட்ட காரணமும் இல்லை. அதே­போல் 'செக்­கச் சிவந்த வானம்' பட கதா பாத்திரமான இப்­ரா­கி­முக்கு சமூ­கத்­தில் சிலரைக் களை எடுக்க வேண்­டி­யி­ருந்­தது, அவ்வளவு­தான்.

"இந்­நி­லை­யில், 'டிஎஸ்பி' நாய­க­னுக்கு மன­தில் ஒரு­வி­த­மான பகை படர்ந்­தி­ருக்­கும். அந்­தப் பகையை வெல்ல அதி­கா­ரம் தேவைப்­ப­டு­கிறது. ஒரு விஷ­யம் துன்­பப்­ப­டுத்தி­னால் அதி­லி­ருந்து விலக முற்­ப­டு­வோம்.

"வெற்­றி­மா­றன் சாரிடம், அவரது 'பொல்­லா­த­வன்' படத்தின் கதை, அதன் தலைப்பு திரையில் தெரியத் தொடங்கியது முதலே ஆரம்பித்துவிடுகிறது என்றேன். 'அவன் பொல்லாதவன், அவனிடம் உங்கள் விளை­யாட்டை வைத்­துக்கொள்ள வேண்டாம்' என்பதாக கதை நகரும். இந்த 'டிஎஸ்பி' படமும் அப்படிப்பட்டவன்தான்.

"இந்­தக் காவல்­துறை அதி­கா­ரிக்கு பிரச்­சினை என்­றால் லட்டு சாப்­பி­டு­வது மாதிரி. அவற்­றைக் கண்டு அஞ்­சும் ரக­மல்ல. மேலும், அதிர்ச்சி அடை­யா­மல் துணிச்­ச­லு­டன் செயல்­பட்டு அனைத்தையும் சமா­ளிக்­கக் கூடிய அதி­காரி," என்­கி­றார் விஜய் சேது­பதி.

காவல்­துறை சீருடை அணி­யும்­போது அத்­துறை அதி­கா­ரி­கள் மீது தனி மரி­யாதை ஏற்­ப­டு­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், இந்­தப் படத்­தில் தனது பாத்­தி­ரம் கச்­சி­த­மாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது என்கிறார்.

"இந்­தச் சீரு­டையை அணிந்­தாலே தனி மிடுக்­கும் துணிச்சலும் வந்­து­வி­டும். அதி­கா­ரத்­திற்கு ஒரு திமிர் இருக்­கிறது. அது தன்­னால் வரும். நீங்­கள் சிம்­மா­ச­னத்­தில் பணி­வாக உட்­கார முடி­யாது. மன்னர் வேடம் போட்­டால் 'உத்­த­ர­வி­டு­கி­றேன்' எனச் சொல்­லி­யாக வேண்­டும். எங்கே என்­ன­வாக இருக்­கி­றீர்­களோ, அதற்கேற்றார் போல் மாறி­வி­டு­வீர்­கள்.

"இக்கதை­யில் அதி­கா­ரிக்கு உள்ள அதி­கா­ரத்­து­டன் சில கற்­ப­னை­களும் சேர்ந்து கொள்­கின்­றன. எனது ­பாத்­தி­ரம் குறித்து யோசித்­த­போது சிவாஜி கணே­சன் சாரின் அந்­தக் கம்­பீ­ரம் நினை­வுக்கு வந்­தது," என்­கிறார் சேது­பதி. தற்போது இசை­யி­லும் கவ­னம் செலுத்­து­கி­றா­ராம். இதற்கு முன்பு மிரு­தங்­கம், கிடார், வாய்ப்­பாட்டு வகுப்­பு­க­ளுக்­குச் சென்று வந்­துள்­ளா­ராம். இசை­யைக் கேட்­டால் வாழ்க்­கை­யைப் புதிய கோணத்­தில் அணுக முடிகிறது என்­கி­றார் விஜய் சேது­பதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!