கோவை சரளாவை 'ராட்சசி' என்று குறிப்பிட்ட கமல்

கோவை சரளாவை 'ராட்சசி' என்று குறிப்பிட்ட கமல்

3 mins read
44c551fb-e96f-4da2-8566-42992dade5ef
'செம்பி' படத்தின் ஒரு காட்சியில் கோவை சரளா. -

'செம்பி' என்ற பத்து வயது சிறுமிக்கும் அவ­ளு­டைய பாட்­டிக்கும் இடையே நடக்­கும் பாசப் போராட்­டத்தை 'செம்பி' படத்­தில் பதிவு செய்­துள்­ளார் பிரபு சால­மன்.

இயற்­கை­யு­டன் இணைந்து, யதார்த்­த­மான படைப்­பு­க­ளைத் தரக்­கூ­டிய இயக்­கு­நர்­களில் ஒரு­வர். வசூல் குறித்து கவ­லைப்­ப­டா­மல், ரசி­கர்­கள் மன­தில் தனது படங்­கள் தனி இடம் பிடிக்க வேண்­டும் என்­பதற்­காக அதி­கம் மெனக்­கெ­டும் படைப்­பாளி என்று திரை­யு­லக விவ­ரப்புள்­ளி­கள் பாராட்­டு­கின்­ற­னர்.

"மலை­வாழ் கிரா­மங்­களில் வசிப்­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள், வெள்­ளந்­தி­யான மனி­தர்­கள். அப்­படி இருக்­கும் ஒரு பாட்­டி­யும் பேத்­தி­யும் இன்­றைய நவீன உல­கத்­துக்­குள் வரும்­போது அவர்­கள் எப்­படி நிரா­கரிப்­ப­டு­கி­றார்­கள், அவர்­க­ளால் அதை எப்­படி எதிர்­கொள்ள முடிந்­தது, பிறகு எப்­படி எல்­லோ­ரும் துணை­யாக நின்­றார்­கள் என்­ப­து­தான் 'செம்பி'.

"இதில் பேருந்து ஒன்றை சமூ­க­மாக உரு­வ­கப்­ப­டுத்தி உள்­ளேன். மொத்­தம் 24 பய­ணி­கள். ஒவ்வொரு­வரும் வெவ்­வேறு குணா­தி­ச­யம் கொண்­ட­வர்­கள். அவர்­கள் அனை­வருமே நம் சமூ­கத்தைப் பிர­தி­பலிக்­கக் கூடி­ய­வர்­கள்.

"தொடக்­கத்­தில் எதி­ராக நின்­ற­வர்­கள் எப்­படி ஆத­ர­வா­ளர்­க­ளாக மாறு­கி­றார்­கள் என்­பது திரைக்­கதை.ஒட்­டு­மொத்­த­மாக எல்­லோ­ரி­டத்­திலும் அன்பு செலுத்­துங்­கள் என்­ப­து­தான் 'செம்பி'. இந்­தப் படத்தை கதை­யாகச் சொல்ல முடி­யாது. உணர்­வு­க­ளின் கோர்­வை­தான் படம். எல்­லாத் தருணங்­க­ளை­யும் முத்து மாலை கோர்ப்­ப­து­போல் கோர்த்­துள்­ளேன்," என்­கி­றார் பிரபு சால­மன்.

இந்­தப் படத்­தில் வீரத்­தாய் என்ற மலை­வாழ் மூதாட்­டி­யாக நடிக்­கி­றார் கோவை சரளா. மலை­வாழ் மூதாட்டி­யாக நடிப்­ப­வர், உண்­மை­யா­கவே அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தால் நன்­றாக இருக்­குமே என்று நினைத்­தா­ராம். எனவே, கொல்­லி­மலை, பச்­சை­மலை, கல்­வ­ரா­யன் மலை, கொடைக்­கா­னல் என்று ஏறாத மலை இல்லை என்று சொல்­லும் அள­வுக்கு தேடி அலைந்தி­ருக்­கி­றார்.

"அதே மாதிரி செம்பி குழந்­தைக்­கா­க­வும் அலைந்­தேன். தேடல் அதி­க­மா­ன­தால் காலம் கருதி தேர்ந்த நடி­கை­களை வைத்து எடுக்க முடிவு செய்­தேன். அப்­போது மன­தில் நின்றவர் 'சதி­லீ­லா­வதி' கோவை சரளா. கமல் சாரு­டன் போட்டி போட்டு நடித்­தி­ருப்­பார்.

"சிறந்த நகைச்­சு­வை­யா­ளர்­தான் சிறந்த நடி­க­ரா­க­வும் இருக்க முடியும். அப்­படி சார்லி சாப்­ளின், பால் நியூமன் போன்­ற­வர்­க­ளைச் சொல்­ல­லாம். சரளா மேடத்­தி­டம் கதை சொல்லி, நிறம், தோற்­றம், உடல்­மொழி என்று மாற்­றங்­கள் செய்து பழங்­கு­டிப் பெண்­ணாக உரு­மாற்­றம் செய்­தேன். அவ­ரு­டன் வேலை செய்­யும்­போ­து­தான் கவ­னித்­தேன். அவரி­டம் உள்ள மன உறு­தி­யும் சக்­தி­யும் வியப்பை ஏற்­ப­டுத்­தின. சிறந்த நகைச்­சு­வை­யா­ள­ருக்­குள் ஒரு நடிகன் இருக்க முடி­யும் என்­பது அவ­ரு­டன் வேலை செய்­யும்­போது தெரிந்­தது.

"ஒரு­சில இடங்­களில் நான் எதிர்­பார்க்­காத அள­வுக்கு நடித்­தார். நான் மட்­டு­மல்ல, ஒட்­டு­மொத்த படக்­குழு­வி­ன­ரும் கைதட்டி ரசித்­தோம்.

"தெளி­தேன் எடுக்­கும் ஒரு காட்சி. பெரிய பள்­ளத்­தாக்­குப் பகுதி­யில் படப்­பி­டிப்பு நடை­பெற்­றது. அந்த இடத்­துக்கு காடு­மே­டு­க­ளைக் கடந்து வர­வேண்­டும். துணிச்­ச­லாக தேன் எடுக்­கும் காட்­சி­யில் நடித்­தார்.

"நிலா என்ற குழந்தை செம்­பி­யாக அசத்தி உள்­ளார். அவி­னா­சி­யைச் சேர்ந்த சிறுமி. சமூக ஊட­கங்­கள் மூலம் அறி­மு­க­மான நிலாவும் கோவை சர­ளா­வுக்கு ஈடு­கொடுக்­கும் வகை­யில் நடித்­தி­ருப்­பது இப்­ப­டத்­தின் மற்­றொரு சிறப்­பம்­சம்.

"தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா உட்பட 24 கதாபாத்திரங்கள் உள்ளனர். படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்பை கமல் பார்த்தார். அடுத்த நிமிடமே சரளா மேடத்தைப் பார்த்து 'நடிப்பு ராட்சசி' என்ற பட்டம் கொடுத் தார்," என்கிறார் பிரபு சாலமன்.