சமந்தா ஆயுர்வேத சிகிச்சை பெறுவதாக தகவல்

சமந்தா ஆயுர்வேத சிகிச்சை பெறுவதாக தகவல்

1 mins read
c2e24a0d-ee26-447e-8a08-8ea6d6b6ad93
-
Google News Preferred Icon

உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் சமந்தா, இப்போது ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாம்.

எனவே மிக விரைவில் அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு நெருக்கமான தோழி ஒருவர் உடனிருந்து கவனித்துக் கொள்வதாகத் தகவல்.

ஒருவகை தசை அழற்சியால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடையப் போராடி வருவதாக சமந்தா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து "உயிருக்கு ஆபத்தான நிலையில் நான் இல்லை. இது ஒரு போர்க்களம். நான் போராடி வருகிறேன்," என உருக்கமாக கண்கலங்கியபடி ஒரு பேட்டியில் அவர் பேசினார்.

பின்பு சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவரது செய்தித்தொடர்பாளர் இது வெறும் வதந்தி என்றும் அவர் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.