'இந்த மிடுக்கு பிடிக்கும்'

'இந்த மிடுக்கு பிடிக்கும்'

3 mins read
85e95e2d-d361-42d5-aadc-abdd1e54c659
-

'கண்­க­ளால் கைது செய்' படம் மூலம் தமி­ழ்த் திரையுலகில் அறி­மு­க­மா­னார் பிரி­யா­மணி. அதன் பிறகு இரு­பது ஆண்­டு­கள் கடந்­தோ­டி­விட்­டன.

திரை­யு­ல­கம் குறித்து எது­வுமே தெரி­யாத நிலை­யில், தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திய இயக்கு­நர் பார­தி­ரா­ஜா­தான் தமக்கு அனைத்து நெளிவு சுளி­வு­க­ளை­யும் கற்­றுத் தந்­த­தா­கச் சொல்­கி­றார்.

"எனது இயற்­பெ­யர் பிரியா மட்­டும்­தான். சினி­மா­வுக்­காக மணி என்­ப­தும் சேர்ந்து கொண்­டது. அந்­தச் சம­யத்­தில் பார­தி­ராஜா அறி­மு­கப்­ப­டுத்­திய கதா­நா­ய­கி­கள் அனை­வ­ருக்­கும் 'ஆர்' வரி­சை­யில் பெயர் சூட்­டு­வார். ராதிகா, ராதா, ரதி என்று எல்­லா­ருமே முன்­னணி நாய­கி­க­ளாக உயர்ந்­த­னர். அத­னால் எனக்­கும் 'ஆர்' வரி­சை­யில் பெயர் வைக்கச் சொல்­லிக் கேட்­டேன்.

"அது மட்­டு­மல்ல, என் அப்பா பெய­ரை­யும் சேர்த்து நானே ரித்திகா மணி என்று ஒரு பெயரை­யும் தேர்வு செய்து வைத்­தி­ருந்­தேன். ஜோதி­டர்­க­ளி­டம் ஆலோ­சனை செய்த பிறகே அந்­தப் பெயரை வைத்­துக்­கொள்ள விரும்­பி­னேன்.

"இது­பற்றி பார­தி­ராஜா சாரி­டம் விவ­ரம் தெரி­வித்­த­போது, 'உன்­னு­டைய இயற்­பெ­யரே நன்­றாக உள்­ளது. வேண்­டு­மா­னால், பிரியா மணி என்று வைக்­க­லாமே' என்­றார். எனக்­கும் அது மிக­வும் பிடித்­துப்போனது," என்று தமது பெயர் ரக­சி­யத்தை உடைக்­கி­றார் பிரி­யா­மணி.

நடப்பு சங்­க­தி­க­ளுக்கு வரு­வோம்.

பிரியா நடித்து வரும் 'DR.56' படத்­தில் அவ­ருக்கு சிபிஐ அதி­காரி வேட மாம். மருத்­து­வத்­து­றை­யில் நிக­ழும் பல்­வேறு குற்­றச்செயல்­களை வெளிச்­சம்­போட்டுக்காட்­டும் பர­பர துப்­ப­றி­யும் கதை.

இப்­ப­டத்­தின் புகைப்­ப­டங்­கள் அண்­மை­யில் வெளி­யா­கின. அதைப் பார்த்த ரசி­கர்­கள், பிரியா மிக­வும் மிடுக்­கா­க­, அழ­கா­க இருப்­ப­தாக வர்­ணித்­துள்­ளனர்.

"சிபிஐ அதி­காரி என்­றாலே ஒருவித மிடுக்கு வந்­து­வி­டு­கிறது. நமக்­குள் ஒரு­வித ரசா­யன மாற்றம் ஏற்­படும். ஏதோ நாம் பிறக்­கும்­போதே அதி­கா­ரி­யாக இருந்­த­தைப் போன்ற உணர்வு ஏற்­படு­கிறது.

"இப்­ப­டத்­தின் இயக்­கு­நர் ராஜேஷ் ஆனந்த் லீலா கதை சொல்­லும்போதே காட்சி அமைப்­பு­க­ளைக் கேட்டு வியந்து போனேன். கன்­ன­டம், தமிழ் என இரு மொழி­க­ளி­லும் பட­மாக்கி உள்­ள­னர். திரு­ம­ணத்­துக்­குப் பிறகு நான் நடிக்க ஒப்­புக்கொண்ட படங்­களில் இது­வும் ஒன்று. இதில் இடம்­பெற்­றுள்ள சண்டைக் காட்­சி­கள் ரசி­கர்களை அசரவைக்­கும். அந்­தக் காட்­சி­களில் நடிப்­ப­தற்­காக மிக­வும் மெனக்­கெட்­டேன். சிறப்­புப் பயிற்­சி­யும் மேற்­கொண்­டேன்," என்­கி­றார் பிரி­யா­மணி.

திரு­ம­ணத்­துக்­குப் பிற­கும் தம்­மால் தொடர்ந்து நடிக்க முடி­கிறது எனில், அதற்கு தன் கண­வ­ரது ஒத்­து­ழைப்­பு­தான் கார­ணம் என்று சொல்கிறார்.

"வாழ்க்கை சுவா­ர­சி­ய­மா­கப் போய்க்கொண்­டி­ருக்­கிறது. நல்ல கண­வ­ரும் புகுந்த வீடும் அமைந்­து­விட்­டால் கவ­லையே வேண்­டாம். வீட்­டில் இருக்­கும்­போது ஒப்­பனை அறை பக்­கமே போகமாட்­டேன். வீட்டை துடைத்­துக் கழுவி, அனைத்துப் பொருள்­களை­யும் அவற்­றுக்­கான இடங்­களில் அடுக்கி வைத்து அழகு பார்ப்­பேன். ஆனால் சமை­ய­லறை பக்­கம் மட்­டும் என்­னைப் பார்க்க முடியாது.

"20 ஆண்­டு­கால பயணத்­தில் எதை­யெல்­லாம் கற்­றுக்கொண்­டீர்­கள் என்று கேட்­கிறார்­கள். தொழில்­நுட்­பம் குறித்து அதி­கம் கற்­றுக்கொண்­டுள்­ளேன்.

"அனைத்­தை­யும் கடந்து இயக்­கு­நராக வேண்­டும் என்ற விருப்­பம்­தான் முதன்­மை­யாக உள்­ளது. கேம­ரா­வுக்­குப் பின்­னால் நின்­றும் பணி­யாற்ற நான் தயார். எதிர்­கா­லத்­தில் என்னை இயக்­கு­ந­ரா­கப் பார்க்க வேண்­டி­யி­ருந்­தால் வியப்­ப­டைய வேண்­டாம்," என்­கி­றார் பிரி­யா­மணி.

திரு­ம­ணத்­துக்­குப் பிறகு தமக்கு நல்ல வாய்ப்­பு­கள் தேடி வரு­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அவற்­றுள் நல்ல கதை­களை மட்­டுமே தேர்வு செய்­வ­தா­க­வும் ஊதி­யம் குறித்து தாம் அதி­கம் கவ­லைப்­ப­ட­வில்லை என்­றும் சொல்­கி­றார். ஓய்வு நேரங்களில் பேட்­மின்­டன் விளை­யாட்­டில் கவ­னம் செலுத்­து­வா­ராம்.

பிரி­யா­ம­ணி­யின் பெற்­றோர் இரு­வ­ருமே விளை­யாட்­டில் சாதித்தவர்கள்.

"என் அம்மா லதாவைப் பல­ருக்­குத் தெரிந்­தி­ருக்­கும். தேசிய அள­வி­லான பேட்­மின்­டன் போட்­டி­யில் பங்­கேற்­ற­வர். அப்பா வாசு­தேவ் மணி­யும் விளை­யாட்டு வீரர் தான். கேரள கிரிக்­கெட் அணி­யில் இடம்­பெற்­ற­வர்.

"நானும்­கூட மாவட்ட அள­வில் பேட்­மின்­டன் போட்­டி­களில் பங்­கேற்று சாதித்­தி­ருக்­கி­றேன். ஆனால் சினிமா ஆசை வந்­த­தால் விளை­யாட்டை விட­வேண்­டி­ய­தா­யிற்று," என்கி றார் பிரியாமணி.