'பலநாள் கதறி அழுதேன்'

'பலநாள் கதறி அழுதேன்'

3 mins read
6f2abab8-599d-4d75-bca6-6d4ec8c74371
-

நல்ல கதை­கள் இருந்­தால் போதும், திரைப்­ப­டம், இணை­யத்­தொ­டர், குறும்­ப­டம் என எது­வாக இருந்­தா­லும் நடிக்­கத் தயார் என்­கி­றார் எஸ்.ஜே.சூர்யா.

ஒரு பக்­கம் வில்­ல­னாக நடிப்­ப­வர், திடீ­ரென கதா­நா­ய­க­னா­க­வும் நடிக்­கி­றார். இரண்டு தளங்­களி­லும் இவ­ரது நடிப்பு பர­வ­லா­கப் பாராட்­டு­களைப் பெறு­கிறது.

தற்­போது முதன்­மு­றை­யாக 'வதந்தி' என்ற இணை­யத் தொட­ரில் நடித்து முடித்­துள்­ளார் எஸ்.ஜே.சூர்யா. 'விக்­ரம் வேதா' பட புகழ் இரட்டை இயக்­கு­நர்­க­ளான புஷ்­கர், காயத்ரி தயா­ரித்­துள்ள இந்த இணை­யத் தொடரை 'கொலை­கா­ரன்' பட இயக்­கு­நர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்­கி­யுள்­ளார்.

இவர் ஏற்­கெ­னவே 'வாலி', 'குஷி' ஆகிய படங்­களில் எஸ்ஜே சூர்­யா­வி­டம் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர். இந்த இணை­யத்­தொ­டர் எதிர்­வரும் டிசம்­பர் 2ஆம் தேதி ஓடிடி தளத்­தில் வெளி­யாக இருக்­கிறது.

கிட்­டத்­தட்ட 240 நாடு­களில் உள்­ள­வர்­கள் இத் தொட­ரைப் பார்க்க முடி­யும் என்­றும் அனை­வ­ரை­யும் கவ­ரும் வகை­யில் இத்­தொ­டர் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் சொல்­கி­றார் எஸ்.ஜே.சூர்யா.

அண்­மை­யில் நடை­பெற்ற இந்­தத் தொட­ரின் விளம்­பர நிகழ்­வில் கலந்­து­கொண்டு பேசிய அவர், "தமி­ழ­கத்­தைக் கடந்து, இந்­தி­யா­வை­யும் தாண்டி உலக அள­வில் செல்லவேண்­டும் என ஆசைப்­பட்­டேன். அது இந்த இணை­யத் தொடர் மூல­மாக, அது­வும் எனது உதவி இயக்­கு­நர் மூல­மா­கவே நிறை­வேறி இருப்­ப­தில் மகிழ்ச்சி," என்று குறிப்­பிட்­டார்.

தமது கடந்­த­கால சினிமா பய­ணத்­தின்­போது எதிர்­கொண்ட சவால்­கள், சோத­னை­கள் குறித்­தும் பேசிய அவர், 2018ல் பாலி­வுட் நடி­கர் அமி­தாப் பச்­ச­னு­டன் இணைந்து பணி­யாற்­றி­ய­தை­யும் நினை­வு­கூர்ந்­தார். அவர் நடித்த 'கள்­வ­னின் காதலி' என்­கிற படத்தை இயக்­கிய தமிழ்­வா­ணன்­தான் அமி­தாப் படத்­தை­யும் இயக்­கி­னார்.

தமி­ழில் 'உயர்ந்த மனி­தன்' என்­றும் இந்­தி­யில் 'தேரா யார் ஹூன் மை' என்­றும் தலைப்பு வைக்­கப்­பட்­டி­ருந்­தது. படத்­துக்­கான முதற்­கட்ட பணி­கள் விறு­வி­றுப்­பாக நடந்­தே­றின. எனி­னும் சில கார­ணங்­க­ளால் அந்­தப் படம் கைவி­டப்­பட்­டது.

"அந்­தக் காலக்­கட்­டத்தை என்­னால் மறக்­கவே இய­லாது. அமி­தாப்­பச்­ச­னு­டன் இணைந்து நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­த­போது திரை­யு­ல­கில் யாரும் சாதிக்க முடி­யாத ஒன்றை நான் சாதித்­து­விட்­ட­தா­கக் கரு­தி­னேன். பத்து நாள்­கள் அவ­ரு­டன் இணைந்து படப்­பி­டிப்­பி­லும் நடித்­தேன். ஆனால் ஏதோ சில கார­ணங்­க­ளால் அந்­தப் படம் கைவிடப்­பட்­டது.

"எனி­னும் நான் சும்மா இருக்­க­வில்லை. அந்தப் படத்­தின் பணி­களை மீண்­டும் தொடங்­கு­வ­தற்கு என்­னால் என்­ன­வெல்­லாம் செய்ய முடி­யுமோ, அதை­யெல்­லாம் செய்­தேன். ஆனால் கடை­சி­வரை வெற்றி கிடைக்­க­வில்லை.

"அந்தப் படம் கைவி­டப்­பட்­ட­து­போது கதறி அழு­தேன். உலக அள­வில் செல்ல வேண்­டும் என்கிற என்­னு­டைய கனவு நொறுங்­கிப் போனது. ஆனால் தற்­போது இந்த 'வதந்தி' இணையத் தொடர் மூலமாக அது கைகூடியுள்­ளது," என்­றார் எஸ்.ஜே.சூர்யா.

ஆண்ட்ரூ தமது திறமைகளை நன்கு வளர்த்துக்கொண்டுள்ளதாக வும் அவரது இயக்­கத்­தில் நடிப்­பதை­விட அழ­கான அனு­ப­வம் அமைந்து­வி­டாது என்­றும் சூர்யா கூறுகிறார்.

"தாம் என்ன செய்­கி­றோம், தன் உடன் இருப்­ப­வர்­களை எவ்­வாறு பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும், ஒரு தர­மான படைப்பை எவ்­வாறு உரு­வாக்க வேண்­டும் என்­பதை ஆண்ட்ரூ நன்கு உணர்ந்­துள்­ளார்.

"இந்­தத் தொடருக்கான வச­னங்­கள், காட்சி அமைப்­பு­கள் குறித்து ஆண்ட்ரூ மிக­வும் கவ­ன­மாக இருந்­தார். எங்­க­ளு­டைய நடிப்பு எப்­படி இருக்க வேண்­டும் என்­பது தொடர்­பான தனது எதிர்­பார்ப்­பு­களை அவர் முன்­கூட்­டியே தெளி­வா­கச் சொல்லி­விட்­டார்.

"அத­னால் எனக்­குள் ஒளிந்­தி­ருக்­கும் நடி­கர் தில­கம் சிவாஜி கணே­சன் அவ்­வப்­போது வெளிப்­பட்­டார்," என்று சொல்­லிச் சிரிக்­கி­றார் எஸ்.ஜே.சூர்யா.

, :   

எஸ்.ஜே.சூர்யா